இந்திய இராணுவத்திற்கு 67 ரோட்டரி விங் ட்ரோன்களை வழங்க உள்ள இஸ்ரேல் நிறுவனம்..

இஸ்ரேலிய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்திய இராணுவத்திற்கு 67 ரோட்டரி விங் ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுறது.

இஸ்ரோலிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய நிறுவனம் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 67 ரோட்டரி விங் ட்ரோன்களுக்கான டெண்டர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு மே 2 அன்று முடிவுற்றது.

இந்த 67 ரோட்டரி விங் ட்ரோன்களுக்கான மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த ட்ரோன்கள் அனைத்து நிலப்பரப்புகளிலும் செயல்படும் திறனை கொண்டிருக்கும். மேலும் 500 மீட்டர் உயரத்திற்கு மேல் பறக்க கூடியவை. இதனை இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின்படி, இந்த ஆளில்லா ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். ரோட்டரி சிறகுகள் கொண்ட இந்த ட்ரோன்கள் ஹெலிகாப்டரை போலவே செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் திறன்களை கொண்டுள்ளன. இந்த ட்ரோன்கள் விநாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் பயணிக்ககூடியது.

இதன் முக்கிய அம்சமாக அதன் கண்காணிப்பு கேமரா இரவு மற்றும் பகல் என அனைத்து வானிலைகளிலும் செயல்படக்கூடியது. இந்த ட்ரோன் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை பறக்கும் தன்மையை கொண்டுள்ளது. – 5 டிகிரி செல்சியஸ் முதல் +55 டிகிரி செல்கியஸ் வரையிலான வெப்பநிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இதன் பார்வை தூரம் பகல் நேரத்தில் குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் மற்றும் இரவில் 1 கிலோமீட்டர் ஆகும். மேலும் தகவல் தொடர்பு செயலிழந்தால் அது மீண்டும் கட்டளை மையத்திற்கு வந்துவிடும். முன்னதாக மேக் இன் இந்தியா திட்டத்தின் காரணமாக அமெரிக்காவின் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை அரசாங்கம் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.