அடுத்த மாதம் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்.. பிரதமர் மோடி உடன் பேச்சுவார்த்தை..!

இந்தியா இஸ்ரேல் இடையிலான 30 ஆண்டுகால முழு இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இருநாட்டு பிரதமர்களும் கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாநாட்டில் (COP 26) கடைசியாக சந்தித்தனர். இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் யூத சமூகத்தினரை சந்தித்து பேசுகிறார்.

இந்த பயணத்தின் போது உக்ரைன் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு, விவசாயம், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட உள்ளன. இதுதவிர இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறுகையில், எனது நண்பரான பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு எனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. நாங்கள் ஒன்றாக இணைந்து நமது நாடுகளின் உறவுகளுக்கு வழி வகுப்போம்.

Also Read: சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான்.. ஐக்கிய அமீரகத்தையும் சாம்பல் பட்டியலில் வைத்த FATF..

எங்களின் இரண்டு தனித்துவமான கலாச்சாரங்களுக்கு இடையிலான உறவுகள் ஆழமானவை. அவை ஆழ்ந்த பாராட்டு மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை நம்பியுள்ளன. இந்தியர்களிடம் இருந்து நாம் கற்றுகொள்ளக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. இதைத்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம். புதுமை, தொழிற்நுட்பம், பாதுகாப்பு, இணையம், விவசாயம் மற்றம் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட உள்ளதாக நஃப்தலி பென்னட் கூறினார்.

கடந்த 1950 ஆம் ஆண்டு இந்தியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீதரித்த போதும், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகை மற்றும் அணிசேரா கொள்கையால் இராஜதந்திர உறவுகள் இல்லாமல் இருந்தன. பின்னர் 1992 ஆம் ஆண்டு இந்தியாவும் இஸ்ரேலும் முறையாக இராஜதந்திர உறவுகளை தொடர்ந்தன.

Also Read: ரஷ்யா உக்ரைன் போர்.. தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்பு உண்டா..?

முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு வந்தார். அதே சமயம் அக்டோபர் 2015 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

பின்னர் இஸ்ரேலிய ஜனாதிபதி ருவன் ரிவ்லின் நவம்பர் 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், நவம்பர் மாதம் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவனே மற்றும் ஆகஸ்டு மாதம் முன்னாள் விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா உட்பட பல தலைவர்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

Also Read: சுரங்க முறைகேடு: சீன நிறுவனத்திற்கு அதிரடியாக தடை விதித்த காங்கோ நீதிமன்றம்..

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ப்ளூ ஃபிளாக் 2021 பலதரப்பு விமானப்படை பயிற்சியில் இந்தியா விமானப்படைகள் பங்கேற்றன. தற்போது ஜப்பான் பிரதமர் ஃபுமியோ இந்தியாவில் இருக்கிறார்.அதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஓமன், கிரீஸ், இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் தனித்தனியாக அடுத்த ஒரு வாரத்திற்கு இந்தியா வர உள்ளனர். மேலும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இந்தியா வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.