பிலிப்பைன்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு செயற்கைகோள் தொடர்பாக பயிற்சி அளிக்க உள்ள இஸ்ரோ..

இந்தியாவின் ஒத்துழைப்புடன் விண்வெளி துறையில் நுழைய பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செயற்கைகோள்கள் அசெம்பிளி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை பற்றிய பயிற்சிகளுக்காக பிலிப்பைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்தியா வர உள்ளனர்.

இந்த ஆண்டு பெங்களுரிவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) யுனிஸ்பேஸ் நானோ செயற்கைகோள் ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை பயிற்சியில் (UNNATI) பங்கேற்க பிலிப்பைன்ஸ் விண்வெளி நிறுவனத்தை (PhilSA) சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அதன் விண்வெளி திறன்கள் மற்றும் நிறுவனங்களை அதிகரிக்க இஸ்ரோ உடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறது. மேலும் இந்தியாவை போலவே மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உள்ளுர் தேவைகளை பூர்த்தி செய்யவும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் கூறுகையில், பிலிப்பைன்ஸ் தனது எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை நோக்கி திரும்ப வேண்டும் என கூறினார். அதேபோல் பிலிப்பைன்ஸின் விவசாய அமைச்சரும் உரங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.