மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனத்தை விரைவில் சோதனை செய்ய உள்ள இஸ்ரோ..

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, சுதேசி விண்வெளி ஓடம் என அழைக்கப்படக்கூடிய அளவீடு செய்யப்பட்ட பதிப்பை சோதனை செய்ய தயாராகி வருகிறது. இஸ்ரோவின் கூற்றுப்படி, இது “மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனம்” அல்லது “ரீயூசபிள் லாஞ்ச் வெஹிக்கிள்” (RLV) ஆகும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தால், முதல் தரையிறங்கும் சோதனை கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள அறிவியல் நகரத்தின் மீது பறக்கும். நாங்கள் மிகவும் குறைந்த பட்ஜெட், குறைந்த செலவு மற்றும் குறைந்த முதலீட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமைதியாக பணியாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அமெரிக்காவும், ரஷ்யாவும் முழு அளவிலான சிறகுகள் கொண்ட விண்வெளி வாகனங்களை பறக்கவிட்டன. ரஷ்யா 1988ல் புரான் என்ற வாகனத்தை ஒருமுறை மட்டும் பறக்க விட்டது. பின்னர் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா விண்வெளி ஓடத்தின் 135 விமானங்களை பறக்க விட்டது. பின்னர் அது 2011ல் முடிவுக்கு வந்தது.

தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா மட்டுமே மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மேம்பாட்டிற்கான செயலில் உள்ள திட்டத்தை கொண்டிருக்கின்றன. அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தால் 2030ல் இந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் முழு அளவிலான சோதனை நடத்தப்படலாம். ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்ட ராக்கெட் நிலை மீட்பு சோதனைகளை விட இஸ்ரோவின் மறுபயன்பாடு மிகவும் சிக்கலானது, அதனால்தான் முழுமையான தேர்ச்சி பெற நேரம் எடுக்கும் என சோம்நாத் கூறியுள்ளார்.

இந்த புதிய வாகனம் கிட்டத்தட்ட 4 டன் எடையுள்ளதாகவும், ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டு, சுமார் 3 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தும், ஒடுபாதையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் விடப்படும். பின்னர் வாகனம் சல்லக்கரேயில் உள்ள பாதுகாப்பு ஓடுபாதையில் விமானம் இயக்கப்படாமல் தன்னாட்சி முறையில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2016, மே 23 அன்று மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம், தொழிற்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டரை (RLVTD) இஸ்ரோ வெற்றிகரமான சோதனை செய்தது. ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓடுபாதையில் தரையிறக்கம் நடத்தப்பட்டது. இந்த ஹைப்பர்சோனிக் தரையிறக்கம் பரிசோதனையில் (RLV-TD HEX) மிதக்கும் வகையில் வடிவமைக்கவில்லை, அதனால் அது கடலில் மூழ்கியது.

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மிகவும் சிக்கலான மறுபயன்பாட்டு ராக்கெட்டை மாஸ்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள். பொதுவாக விண்வெளியில் தொலைந்து போகும் ராக்கெட்டின் மேல் கட்டத்தை பூமிக்கு கொண்டு வர வேண்டும். ராக்கெட்டின் மேல் நிலை மிகவும் சிக்கலான மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ்களை கொண்டுள்ளது. மேல் கட்டத்தை மீட்க முடிந்தால் ராக்கெட் ஏவுவதற்கான செலவை வியத்தகு முறையில் குறைக்கும்.

மேலும் விண்வெளி குப்பைகளையும் குறைக்கும். மாறாக ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பயன்படுத்தப்படும் ராக்கெட் கட்டங்களை கீழ் பகுதியில் உள்ளன. அவை அடிப்படையில் உலோக வெற்றிடங்கள், மேலும் அவற்றில் விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் இல்லாததால் ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானவை என சோம்நாத் தெரிவித்தார். சுதேசி விண்கலம் உண்மையில் வாகனத்தை சுற்றுவதற்கான இரண்டு நிலைகளை கொண்டுள்ளது.

Also Read: முடிவுக்கு வரும் அமெரிக்காவின் டாலர்.. வளர்ந்து வரும் ரஷ்யாவின் ரூபிள்..

மீண்டும் பயன்படுத்தக்கூடிய இறக்கைகள் கொண்ட வாகனம் ஒரு ராக்கெட்டின் மீது செங்குத்தாக அமர்ந்து, அதை விண்வெளியில் உயர்த்தி ஒரு சுற்றுபாதையில் நிறுத்துகிறது. அது முடிந்ததும் இறக்கைகள் கொண்ட வாகனம் பிரிந்து பூமியை சுற்றி வருகிறது. பணி முடிந்ததும், சுற்றுப்பாதையில் உள்ள சுதேசி விண்வெளி விண்கலத்திற்கு மிஷன் கட்டுப்பாட்டு மையம் கட்டளைகளை அனுப்புகிறது. அதன் பின்னர் ஶ்ரீஹரிகோட்டாவில் கட்டப்படக்கூடிய ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

மீண்டும் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் தேர்ச்சி பெற்றால், எரிபொருள் தீர்ந்து போன விலையுயர்ந்த செயற்கைகோள்களை மீண்டும் எடுத்து மீண்டும் அனுப்பலாம். விலையுயர்ந்த கண்காணிப்பு தளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் பூஜ்ஜிய புவியீர்ப்பு சூழலில் மருந்து கலவைகள் தயாரிக்கப்படலாம், உயிரியல் பரிசோதனைகள் செய்து விண்வெளியில் இருந்து மீட்டெடுக்கலாம், மனித உறுப்புகளை கூட விண்வெளியில் வளர்த்து பூமிக்கு கொண்டு வர முடியும் என சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியா 2026 ஆம் ஆண்டே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என IMF கணிப்பு..!

Leave a Reply

Your email address will not be published.