சிப் உற்பத்தியில் சீனாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்யும் இத்தாலி.. இஸ்ரேல், தைவானுடன் கூட்டு..?

செமிகண்டக்டர் உற்பத்தியில் முதலீடு செய்துள்ள சீனாவை இத்தாலி வெளியேற்றி வருகிறது. சுயமாக அல்லது இத்தாலியின் நட்பு நாடுகளின் உதவியின் உடன் செமிகண்டக்டரை உற்பத்தி செய்ய இத்தாலி முயன்று வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை இத்தாலி ரத்து செய்து வருகிறது.

சீன நிறுவனங்களை வெளியேற்றிய நிலையில், செமிகண்டக்டர்களை உருவாக்க தைவான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலை முதலீடு செய்ய இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, கடந்த ஆண்டு மூன்று சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.

இதன் மூலம் சீனா இத்தாலிய தொழிற்நுட்ப சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்துவதை தவிர்க்க முடியும் என பிரதமர் நம்புகிறார். ரத்து செய்யப்பட்ட சீனாவின் சிலிகான் தயாரிப்பு நிறுவனமான ஜிஜாங் ஜிங்ஜாங் மெக்கனிகல் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஹாங்காங் பிரிவின் கூட்டு முயற்சியாகும்.

அமெரிக்காவின் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் சீனாவுடன் கூட்டு சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனா ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதனால் இத்தாலி சீன நிறுவனத்தை வெளியேற்றி உள்ளது.

இந்த நிலையில் சிப் உற்பத்தியில் இன்டெல் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதால், உள்நாட்டு சிப் உற்பத்தியை அதிகரிக்க இத்தாலி அரசு 2030 ஆம் ஆண்டு வரை 4.6 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ்-இத்தாலி கூட்டு நிறுவனமான எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், தைவானின் MEMC எலக்ட்ரானிக்ஸ் மெட்டீரியல்ஸ் மற்றும் இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர் ஆகியவற்றை இன்டேல் நிறுவனம் வாங்குவதற்கு இத்தாலி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது கொரோனா தொற்றுநோயால் உலகளவில் சிப் உற்பத்தி குறைந்து செமிகண்டக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தொற்றநோயால் பலரும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் கணினி மற்றும் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் செமிகண்டக்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு உள்நாட்டிலேயே சிப் உற்பத்தியை அதிகரிக்க இத்தாலி முயன்று வருகிறது. சிப் உற்பத்தியில் 10 நேனோமீட்டர்கள் கீழ் உள்ள நோட்களின் உற்பத்தியில் தைவான் உலகின் 92 சதவீதத்தை வைத்துள்ளது. மொத்த உற்பத்தியில் 75 சதவீதத்தை வைத்துள்ளது.

இதனால் தைவான் நிறுவனத்தின் உதவியுடனும் இத்தாலி சிப் உற்பத்தியில் ஈடுபட முயற்சி செய்து வருகிறது. இந்தநிலையில் தான் இத்தாலி சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு தைவான், இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியுடன் சிப் உற்பத்தியை தொடங்க ஆர்வமாக உள்ளது. இதே போன்று இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளும் உள்நாட்டிலேயே சிப் உற்பத்தி செய்ய நிதியை ஒதுக்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.