சீன நிறுவனங்களை வெளியேற்றிய இத்தாலி.. பின்னடைவில் சீனா, தைவானுக்கு வாய்ப்பு..?

கடந்த ஆண்டு இத்தாலி அரசு குறைகடத்தி துறையில் சீன நிறுவனங்களை வெளியேற்றிய நிலையில் தற்போது குறைகடத்தி துறையை மேம்படுத்த தைவான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலை முதலீடு செய்ய அழைக்கிறது இத்தாலி.

முற்றிலும் சீன ஈடுபாடு இல்லாத குறைகடத்தி துறையை உருவாக்க இத்தாலி முயன்று வருகிறது. இதனால் கடந்த ஆண்டு குறைகடத்தி துறையில் சீன முதலீட்டை ரத்து செய்து சீன நிறுவனங்களை இத்தாலி அரசு வெளியேற்றியது. தற்போதைய இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.

கடந்த ஆண்டு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீன முதலீட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அதில் சீன சிலிகான் தயாரிப்பு நிறுவனமான ஜிஜியாங் ஜிங்செங் மெக்கானிக்கல் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஹாங்காங் ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவை தளமாக கொண்ட அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம், குறைகடத்திகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பொருட்களை தயாரிக்க பயன்படும் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. எனவே சீன நிறுவனங்கள் இத்தாலியில் நுழைந்தால் அது இத்தாலி குறைகடத்தி தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என இத்தாலி அஞ்சுகிறது.

Also Read: இந்திய கோதுமையை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து.. கோதுமை சப்ளையராக இந்தியா அங்கீகரிப்பு..!

குறைகடத்தி துறையில் இன்டெல் போன்ற உலகளாவிய தொழிற்நுட்ப நிறுவனங்கன் முதலீடு செய்ய வசதியாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 2030 ஆம் ஆண்டு வரை 4.6 பில்லியன் டாலர் நிதியை இத்தாலி அரசு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ்-இத்தாலிய நிறுவனமான ST மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், தைவானின் MEMC எலக்ட்ரானிக்ஸ் மெட்டீரியல்ஸ் மற்றும் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்படும் இஸ்ரேலிய டவர் செமிகண்டக்டர் நிறுவனத்துடனும் இத்தாலி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ள அமெரிக்கா..?

கடந்த மாதம் குறைகடத்தி உற்பத்திக்காக ஐரோப்பிய யூனியன் புதிய நிதியை அறிவித்துள்ளது. சிப் உற்பத்தியில் தைவான் முதலிடத்தில் உள்ளது. 10 நானோமீட்டர்கள் மற்றும் அதற்கு குறைவாக உள்ள நோட்களின் உற்பத்தியில் 92 சதவீதமும், உலகின் ஒருங்கிணைந்த மின்சுற்று உற்பத்தி திறனில் 75 சதவீதமும் தைவானில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தாலியின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.