ஜெய்சங்கர் ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி.. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டு..!

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அவரது நாட்டின் உண்மையான தேசபக்தர் என கூறியுள்ளார். போருக்கு மத்தியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை குறைக்கும் அழுத்தத்தின் மத்தியில் இந்தியா தனது வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் என செர்ஜி கூறியுள்ளார்

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் செர்ஜி லாவ்ரோவ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி மற்றும் அவரது நாட்டின் உண்மையான தேசபக்தர் என கூறியுள்ளார். பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அல்லது சில மூலோபாய துறைகளுக்கு ரஷ்யா தனது மேற்கத்திய சகாக்கள் எவரையும் நம்ப முடியாது என கூறியுள்ளார்.

ஐ.நா விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான நடவடிக்கைகளை பயன்படுத்தாத மற்ற அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதில் இந்தியாவும் ஒன்று, இருதரப்பும் ஒத்துழைப்போம் என செர்ஜி கூறியுள்ளார்.

இந்தியா எங்களின் மிக மிக பழைய நண்பர். நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் உறவை மூலோபாய கூட்டாண்மை என அழைத்தோம். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எளிமையான வர்த்தகத்தை உள்ளுர் உற்பத்தியுடன் மாற்றியமைக்க தொடங்கினோம்.

Also Read: சீனாவின் வலையில் சிக்கிய மற்றொரு நாடு.. ஜப்பான் செல்கிறார் ஜசிந்தா ஆர்டெர்ன்..

இந்தியாவுக்கு தேவையான பொருட்களின் உற்பத்தியை தங்கள் பிராந்தியத்தில் மாற்றினோம் என செர்ஜி கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கு தேவையான எந்த ஆதரவையும் ரஷ்யா வழங்க முடியும் என கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பின்னணியில் தொழிற்நுட்ப பரிமாற்றம் இந்தியாவின் வெளி பங்காளிகள் எவருக்கும் முற்றிலும் முன்னோடியில்லாதது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி கூறினார்.

Also Read: சீனாவின் 3 சூரிய மின்சக்தி திட்டத்தை ரத்து செய்து இந்தியாவிற்கு வழங்கிய இலங்கை..?

Leave a Reply

Your email address will not be published.