கிர்கிஸ்தான் நாட்டிற்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்.. ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து விவாதிப்பு..

நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலாவதாக ஞாயிறு அன்று கிர்கிஸ்தான் நாட்டிற்கு அமைச்சர் சென்றார்.

கிர்கிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ருஸ்லான் கஜக்பேவுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் கிர்கிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சமூக திட்டங்களை செயல்படுத்துவது, இந்திய மாணவர்களுக்கான விசா, இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

மேலும் பிஷ்கெக்கில் உள்ள மானஸ் மகாத்மா காந்தி நூலகத்திற்கு இந்திய காவியங்களை அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். மானஸ் மகாத்மா காந்தி நூலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜெய்சங்கர் ட்விட்டரில் தெரிவித்தார்.

வெளியுறவு துறை அமைச்சராக பதவி ஏற்றபின் அமைச்சர் ஜெய்சங்கர் கிர்கிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. மேலும் கிர்கிஸ்தான் ஜனாதிபதி சதிர் ஜபரோவையும் சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also Read: அமெரிக்கா சீனா இடையே போர் வரலாம்: முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

கிர்கிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அக்டோபர் 11 முதல் 12 வரை கஜகஸ்தானுக்கு செல்கிறார். அங்கு CICA கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் கிர்கிஸ்தான் சுற்றுபயணத்தை முடித்துகொண்டு அக்டோபர் 12 முதல் 13 வரை ஆர்மீனியாவுக்கு செல்கிறார்.

Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

அங்கு ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஷின்யனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்திலும் ஆப்கானிஸ்தான் பிரச்சனை முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read: ஆப்கனில் பெண்களின் உரிமை தொடர்பாக தாலிபானுக்கு ஜி20 நாடுகள் கேள்வி எழுப்ப வேண்டும்: இம்மானுவேல் மேக்ரான்

Leave a Reply

Your email address will not be published.