சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா..

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ வலிமை மற்றும் பொருளாதார செல்வாக்கு மத்தியில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் வியாழன் அன்று கையெழுத்திட்டுள்ளனர்.

வியாழன் அன்று நடைப்பெற்ற உச்சிமாநாட்டில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். RAA எனப்படும் பரஸ்பர அணுகுதல் ஒப்பந்தம் ஜப்பானின் இரண்டாவது ஒப்பந்தமாகும்.

இதற்கு முன் அமெரிக்காவுடன் ஜப்பான் இராணுவ உடன்படிக்கையை மேற்கொண்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், RAA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கான முக்கிய தருணம் என குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு படைகளுக்கு இடையே செயல்படுவதில் அதிக மற்றும் சிக்கலான ஈடுபாட்டை ஆதரிக்கும் என தெரிவித்தார்.

ஏற்கனவே சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் கிஷிடா கூறுகையில், இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்லும் என குறிப்பிட்டார்.

Also Read: நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

இதேபோல் ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடனும் RAA ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே தகராறு உள்ள நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் சீனா தைவானை கைப்பற்ற முயற்சிக்கும் என கூறப்படுகிறது.

Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்..

சீனா தைவானை கைப்பற்றினால் ஜப்பான் தைவானுக்காக போரில் ஈடுபடும் என முன்னாள் ஜப்பான் பிரதமர் வெளிப்படையாக கூறினார். இது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பதிலளித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இந்த இருதரப்பு ஒப்பந்தம் பிராந்திய நம்பிக்கை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தம் எந்த மூன்றாம் தரப்பு நலன்களையும் குறிவைக்கவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ கூடாது என குறிப்பிட்டார்.

Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..

Leave a Reply

Your email address will not be published.