சீனாவுக்கு எதிராக இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா..!

சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் பெரும் அச்சுருத்தலாக இருக்கும் நிலையில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் முதல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டர்.

தற்போது இந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உளவுத்துறை பகிர்வு, இராணுவ ஆதரவு, துருப்புகளை பறிமாறி கொள்வது மற்றும் கூட்டு இராணுவ பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜப்பான் அமெரிக்கா உடன் மட்டுமே பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்ததிட்டு இருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா உடன் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜப்பான் வான்வெளியில் சீனா அதன் 22 இராணுவ விமானங்களை அனுப்பியது. பின்னர் ஜப்பான் போர் விமானங்கள் சீன விமானங்களை விரட்டி அடித்தன. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த இருநாடுகளும் குவாட் கூட்டமைப்பிலும் உள்ளன. குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது.

மேலும் ஐந்து கண்கள் எனப்படும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உளவுத்துறை தகவல்களை பகிந்து கொள்ளும் கூட்டணியில் இணையவும் ஜப்பான் முயன்று வருகிறது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ஐந்து கண்கள் கூட்டணியில் இணைவதற்கு முதல் படியாகும்.

ஐந்து கண்கள் கூட்டணியில் இணையும் வரை இந்த கூட்டணி நாடுகளின் உளவுத்துறை பகிரும் தகவல்கள் ஆஸ்திரேலியா மூலம் ஜப்பானுக்கு பகிரப்படும். மேலும் ஜப்பான் தனது திரவ இயற்கை எரிவாயு மற்றும் நூடுல்ஸ் தயாரிக்க பயன்படும் கோதுமை ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலியாவை நம்பியே உள்ளது.

ஜப்பான் தனது திரவ இயற்கை எரிவாயுவில் 40 சதவீதம் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதுதவிர ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டிமனி, கோபால்ட், லித்தியம், மாங்கனீசு, நியோபியம், டங்ஸ்டன் மற்றும் வெனடியம் போன்ற முக்கியமான கனிமங்களையும் ஜப்பான் இறக்குமதி செய்கிறது. இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா படைகள் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.