சொந்தமாக கைவினை பொருட்களை தயாரித்து வருமானம் ஈட்டும் ஜார்கண்ட் பெண்..

ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மீரா தேவி கைவினை பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வருகிறார். 33 வயதான மீரா தேவி சொந்தமாக கடை வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா தொற்று நேரத்தில் பெரும்பாலோனோருக்கு வேலை இல்லாமல் சிரமபட்டு வருகின்றானர். மேலும் சிறுகுரு தொழில்கள் பலத்த அடிவாங்கி உள்ளதால் பலர் அன்றாட செலவுக்கே மிகவும் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஜார்கண்டை சேர்ந்த மீரா தேவி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர் குடும்பத்தில் கணவர் மட்டுமே வேலைக்கு சென்று வருகிறார். கொரோனா தாக்கத்தால் மாதம் 8,000 ரூபாய் மட்டுமே வருமானமாக வருகிறது. ஆனால் இந்த தொகை அந்த குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. மீரா தேவி குழந்தைகளை கவனித்து வருவதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இருப்பினும் மீரா தேவிக்கு கைவினை பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. எங்காவது கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றால் தவறாது கலந்து கொண்டு பொருட்களை பார்வையிடுவார். தற்போது கொரோனா தொற்றால் எங்கும் கண்காட்சி நடைபெறவில்லை. மேலும் வருமானமும் இல்லாததால் கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவெடுத்தார்.

இருப்பினும் அதனை எப்படி தயாரிப்பது விற்பது போன்ற அடிப்படை தெரியவில்லை. அப்போது திறமை மேம்பாட்டு பயிற்சியின் கீழ் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கான பயிற்சி மையம் பற்றி மீரா தேவிக்கு தெரியவந்தது. அந்த பயிற்சி மையம் டாப்ரா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி ஃபார் வொமன் (TRDSW) என அழைக்கப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து எப்படி கைவினைப்பொருட்களை தயாரிப்பது என்ற பயிற்சியை கற்றுகொண்டு தற்போது சொந்தமாக மூங்கிலில் கைவினைப்பொருட்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணவரின் வருமானத்தை விட் அதிகமாக இருப்பதாக தேவி கூறுகிறார்.

தற்போது இதனை தயாரிக்கும் பணியில் எட்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி உள்ளார். கைவினை பொருட்களை தயாரிப்பது பற்றிய பயிற்சியையும் மற்ற பெண்களுக்கு வழங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.