பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் JeM பயங்கரவாதிகள் கைது..

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை போலிசார் சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் டிரால் பகுதியை சேர்ந்த ஷபிக் அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஷபிக் அகமது ஷேக் பாதுகாப்பு படையினரை தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினால் ஜம்முவுக்கு அனுப்பப்பட்டவன். மேலும் ஷபிக் அகமது ஷேக் பாதுகாப்பு படையினரை தாக்குவதற்காக மேலும் இரண்டு பயங்கரவாதிகளை அவனது வீட்டில் தங்கவைத்துள்ளான்.

ஷபிக் அகமது ஷேக் உடன் தங்கியிருந்த மற்றொரு நபர் பிலால் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

குல்காமின் மிர்ஹாமா பகுதியில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு முன் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Also Read: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடித்ததில் 33 பேர் உயிரிழப்பு..? எச்சரித்த தாலிபான்..

இன்று பிரதமர் மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் வருகிறார். பிரதமரின் பயணத்தை நாசப்படுத்துவதற்கான பெரிய சதியின் ஒரு பகுதியாக பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என ஜம்மு போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: பிரதமர் மோடி ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. CISF வீரர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.