ஜோ பிடன் பதவி விலக வேண்டும்: டொனல்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

ஆப்கானிஷ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் காரணம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தாலிபான்கள் தாக்குதல் நடத்தி மகாணங்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தி தலைநகரையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.

ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றிய தாலிபான்கள், போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் விரைவில் ஆட்சி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தாலிபான்கள் தலைநகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உடன் ஜனாதிபதி அஷ்ரப் கனி அவரது மனைவி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தஜகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் தஜிகிஸ்தான் அனுமதி அளிக்க மறுத்ததால் அவர் ஓமனுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கன் துணை ஜனாதிபதி இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆயிரகணக்கான மக்கள் காபூல் விமானநிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.

இதனை குறிப்பிட்டு ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு ஜோ பிடன் தான் காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்தவரை அங்கு அமைதி நிலவியதாக அவர் தெரிவித்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஜோ பிடன் பதவி விலக வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.