உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “பாரத் 150” ட்ரோனை வெளியிட்ட கல்யாணி குழுமம்..

புனேவை சேர்ந்த இந்திய கூட்டு நிறுவனமான கல்யாணி குழுமத்தின் பாதுகாப்பு பிரிவான கல்யாணி ஸ்ட்ரேடஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் (KSSL) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மல்டி பேலோட், தனித்துவமான பாரத்-150 ட்ரோன் மாடலை KSSL வெளியிட்டுள்ளது.

மேலும் இதேபோன்ற X-8 கட்டமைப்பு ஆளில்லா விமானம் ஏற்கனவே இந்திய இராணுவத்தால் லே லாடாக்கில் உள்ள உயரமான பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது 20 கிலோ பேலோட் மற்றும் 8.5 கிலோமீட்டர் பயணிக்க கூடியது. இந்த பாரத் 150 ட்ரோன், செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) ஆளில்லா வான்வழி வாகனம் ஆகும்.

அதிகபட்சமாக 150 கிலோ மற்றும் டேக் ஆஃப் எடை 58 கிலோ ஆகும். இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரேடியோ தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் ஜாமிங் மற்றும் ஸ்பூஃபிங் எதிர்ப்பு திறன்களுடன் கூடிய இனெர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் நெரிசல் மற்றும் ஜிபிஎஸ் மறுக்கப்பட்ட சூழலிலும் செயல்படும்.

ட்ரோனின் பேட்டரிகள் 50 கிமீ முதல் 200 கிமீ வரை தகவல் தொடர்பு இணைப்புடன் குறைந்தபட்சம் 30 நிமிட ஆற்றலை அளிக்கும். பயன்பாட்டிற்கு ஏற்ப ஆற்றலை அதிகரிக்க முடியும். நீர் மற்றும் தூசி புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாரத் 150, மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் முதல் 65 டிகிரி செல்கியஸ் வரையிலான வெப்பநிலை வரம்பில் சராசரியாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.

Also Read: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்.. 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு..

தரையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 5500 மீட்டர் உயரத்திலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன் வெளியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரத் போர்ஜ் டிஃபென்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜிந்தர் பாட்டியா, பாரத் 150 என்ற அதிநவீன ஆளில்ல வான்வழி வாகனத்தை உருவாக்கியதில் நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம் என கூறியுள்ளார்.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

மேலும் இது சுதேசி தயாரிப்பு, நாட்டை மேலும் தன்னிறைவு கொண்டதாக மாற்றவதற்கான நமது உறுதிபாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த ட்ரோனை பல்வேறு தேவைகளுடன் பல்வேறு துறைகளில் பயன்படுத்தலாம். அதன் செயல்திறன் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த பாரத் 150யை மேம்படுத்தி அதன் தாங்கும் திறன் மற்றும் பேலோட் திறனை ISR க்கு ஏற்ப மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

Leave a Reply

Your email address will not be published.