கன்ஹையா கொலை வழக்கு: குற்றவாளிகள் மீது UAPA சட்டத்தின் கீழ் NIA வழக்கு பதிவு..

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்டதற்காக தையல் தொழிலாளி கன்ஹையா லால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினர் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்துறை அமைச்சகம் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டில், நேற்று ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த கன்ஹையா லால் தெலியின் கொடுரமான கொலையின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் எந்தவொரு அமைப்பு மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) ஏற்கனவே ராஜஸ்தான் சென்றடைந்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு குழுவில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலை அதிகாரி ஒருவர் உள்ளார். விசாரணை குழு உதய்பூர் சென்றுள்ள நிலையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தீவிரவாத வழக்காகவே முன்னெடுத்து செல்லப்படும்.

NIA இந்த வழக்கில், இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 452(காயப்படுத்துதல், தாக்குதல் அல்லது அத்துமீறல்), 302 (கொலை), 153A (மதம், இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் கீழ் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல்), 153B(தேசிய ஒருமைபாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள்), 295A (வேண்டுமேன்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், எத்ந வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீற்றம் செய்யும் நோக்கம் கொண்டது).

34(பல நபர்களால் செய்யப்படும் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளன. மேலும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) 1967 பிரிவுகள் 16 (பயங்கரவாத சட்டம்), 18(சதி), 20(பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினர்) ஆகிய பிரிவுகளும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 28 அன்று, நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்டதற்காக உதய்பூரை சேர்ந்த கன்ஹையா லால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கன்ஹையா லால் போனில் இருந்து அவரது 8 வயது மகன் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது தற்செயலாக இந்த பதிவு போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பதிவை பார்த்த பக்கத்து வீட்டுகாரர் நாஜிம், கன்ஹையா லால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து கன்ஹையா லால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளன. தனது கடையை 5 அல்லது 6 பேர் நோட்டமிட்டனர். தையல் கடையை திறக்க வேண்டாம் எனவும் அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன.

இதுகுறித்து தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கன்ஹையா லால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலிசார் அவர்களை கைது செய்யாமல் சமாதானம் பேசியுள்ளனர். உயிருக்கு பயந்து 6 நாட்கள் கடையை மூடிய நிலையில் 7 நாள் கடையை திறந்தார் கன்ஹையா லால்.

இந்த நிலையில் கன்ஹையா லாலின் புகைப்படம் மற்றும் அவரது இருப்பிடம் குறித்து நாஜிம் மற்றும் பிறரால் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளன. இந்த நிலையில் 28 ஆம் தேதி கன்ஹையா லால் கடைக்குள் வாடிக்கையாளர் போல் வந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் கன்ஹையா லாலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

Also Read: கன்ஹய்யா கொலை: இந்தியா இந்துக்களின் நாடு, இஸ்லாமிய நாடு அல்ல: நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்

இதனை வீடியோவாகவும் பதிவிட்டு கன்ஹையா லாலை கொலை செய்தது நாங்கள் தான் எனவும் பதிவிடுள்ளனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை உள்துறை அமைச்சம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரிடமும் NIA விசாரணை நடத்த உள்ளது. UAPA சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

Also Read: கன்ஹையா கொலை: மதரஸாக்கள் தலையை துண்டிப்பது மட்டுமே தண்டனை என கற்பிக்கின்றன: கேரள ஆளுநர் ஆரிப்கான்

Leave a Reply

Your email address will not be published.