காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுவதை அடுத்து சமூக விரோதிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏழு பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கல் வீச்சில் ஈடுபடுவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை ஜம்மு காஷ்மீர் போலிசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகரில் 70 பேரும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் சுமார் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய அரசு உளவுத்துறை உயர் அதிகாரிகளை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பும் பயங்கரவாதிகளுக்கு தொடர்பான 16 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகரில் மட்டும் கடந்த 5 நாட்களில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..

வியாழனன்று ஸ்ரீநகரில் உள்ள அரசுப்பள்ளியில் புகுந்து பெண் தலைமை ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் ஆசிரியர்களின் அடையாள அட்டையை பார்த்து சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களா என்பதை உறுதி செய்துவிட்டு கொலை செய்துள்ளனர்.

Also Read: ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம் 140 நாடுகளை இணைக்கும் பிரதமர் மோடியின் சூரியஒளி திட்டம்..

ஆன்லைன் வகுப்பு என்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. செவ்வாய் கிழமை அன்று மகான் லால் பிந்த்ரூ என்ற காஷ்மீர் பண்டிட் அவரது மெடிக்கல் ஷாப்பிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டார். பீகாரை சேர்ந்த வீரேந்திர பாஸ்வான் மற்றும் முகமது ஷாபி லோன் ஆகியோறும் ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டனர்.

Also Read: சீனாவுக்கு எதிராக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்யும் இந்திய தனியார் நிறுவனம்..

Leave a Reply

Your email address will not be published.