கதி சக்தி: அமெரிக்காவில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு..!

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒரு வார அமெரிக்க சுற்று பயணத்தின் போது நியூயார்க்கில் அந்நாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக்ம் அதிகாரிகளுடன் உரையாடினார். இந்தியாவில் தொழில் தொடங்க அவர் அழைப்பு விடுத்தார்.

மேக் இன் இந்தியா, பிரதமர் தொடங்கி வைத்த 100 லட்சம் கோடி மதிப்பிலான கதி சக்தி திட்டம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து அவர் அமெரிக்க நிறுவன தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒருவார பயணமான அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை வாசிங்டன் டிசியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். சனிக்கிழமை அன்று மாஸ்டர்கார்டு நிர்வாக தலைவர் அஜய் பாங்காவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் மீபாக்கை சந்தித்தார். பின்னர் ஃபெடெக்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ராஜ் சுப்ரமணியத்துடன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள கதி சக்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் சிட்டிகுருப் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் ஃப்ரேசருட்ன் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் கதி சக்தி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். இந்தியாவில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்தார். பின்னர் IBM தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணாவையும் சந்தித்து பேசினார்.

Also Read: இந்த நிதியாண்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: உலக வங்கி

இந்த சந்திப்பில் சைபர் பாதுகாப்பு, 5G, தரவு, செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் IBM நிறுவனத்தின் ஆர்வம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பாஸ்டன் பயணத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார். ஹார்வர்ட் பள்ளிக்கு சென்ற நிதியமைச்சர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.

Also Read: இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்..

அக்டோபர் 13 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த 100 லட்சம் கோடி மதிப்பிலான கதி சக்தி திட்டம் என்பது, லாஜிஸ்டிக் செலவுகள் குறைப்பு, சரக்கு கையாளும் திறனை அதிகரித்தல், கப்பல் திரும்பும் நேரத்தை குறைத்தல், சாலை போக்குவரத்து, விமானம், இரயில் என சம்பந்தப்பட்ட அணைத்து துறைகளையும் இணைப்பதாகும். இதன் மூலம் நடைபெறும் திட்டங்களுக்கு அதிக சக்தி மற்றும் வேகத்தை வழங்குவதே இந்த கதி சக்தியின் நோக்கமாகும்.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

Leave a Reply

Your email address will not be published.