உ.பி.யில் கான்பூர் வன்முறையை தூண்டிய ஹயாத் ஜாபர் ஹஷ்மியின் விடுதிக்கு KDA நோட்டீஸ்..

கான்பூர் வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஹயாத் ஜாபர் ஹஷ்மியின் பாய்ஸ் ஹாஸ்டலில் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் (KDA) நோட்டீஸ் ஓட்டியுள்ளது. அதில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் கட்டடம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமர்பிக்க தவறும் பட்சத்தில் விடுதி புல்டோசர் மூலம் இடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பெக்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யதிம்கானா நை ரோட்டில் ஜூன் 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையில்,போலிஸ் மற்றும் போராட்டகாரர்கள் என இரு தரப்பினருக்கும் இடையே மோதல், கல் வீச்சு, துப்பாக்கி சூடு, பெட்ரோல் குண்டு தாக்குதல் என மிகப்பெரும் வன்முறை வெடித்தது.

போலிசார் விசாரணையில் கான்பூர் வன்முறைக்கு ஹயாத் ஜாபர் ஹாஷ்மி என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. ஹயாத் ஜாபர் ஹஷ்மிக்கு மௌலான முகமது அலி ஜௌஹர் ரசிகர்கள் சங்கம் என்ற அமைப்பு ஒன்றும் உள்ளது. இந்த அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்தாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஹயாத் ஜாபர் ஹாஷ்மி, காகதேவில் பி பிளாக்கில் உள்ள ஹிட்காரி நகரில் ஆண்கள் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இந்த தங்கும் விடுதி மூன்று மாடிகளுடன் சுமார் 40 அறைகளை கொண்டுள்ளது. இந்த விடுதியின் மதிப்பு 1.5 முதல் 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விடுதி பூர்வாஞ்சல் பாய்ஸ் ஹாஸ்டல் என அழைக்கப்படுகிறது.

கான்பூர் மேம்பாட்டு ஆணையம் விசாரணையில், ஹயாத் ஜாபர் ஹாஷ்மி சட்டவிரோதமாக தங்கும் விடுதியை கட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் பிரிவு 27 (1)ன் கீழ் நோட்டீஸ் விடுதிக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானில் இருந்து வந்த 17 இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய குஜராத் அரசு..!

அந்த நோட்டீஸில், விடுதி தொடர்பான ஆவணங்களுடன் ஜூன் 30 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அலுவலர் முன் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. எந்த உத்தரவின் பேரில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என்று கருதி ஏன் கட்டிடத்தை இடிக்க கூடாது என்பதை கட்டிட உரிமையாளர் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஹயாத் ஜாபர் ஹாஷ்மி தற்போது சிறையில் உள்ளதால், வரமுடியாவிட்டால் உங்கள் பிரதிநிதியை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.