கேரள மாடலை கைவிட்டு குஜராத் மாடலை பின்பற்றும் கேரளா.. அதிகாரிகளை குஜராதிற்கு அனுப்புகிறது..

கேரளாவின் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கம், பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் மாடலை அறிந்து கொள்வதற்காக குஜராத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இரண்டு பேர் கொண்ட குழுவை குஜராத்திற்கு அனுப்ப கேரளா முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் உள்ள டாஷ்போர்டு அமைப்பை ஆய்வு செய்ய தலைமை செயலாளரை அனுப்பிய கேரளாவின் முடிவை கேரள பாஜகவின் தலைவர் கே.சுரேந்திரன் பாராட்டியுள்ளார். மேலும் கூறிய சுரேந்திரன், கடைசியாக குஜராத் மாதிரி வளர்ச்சியை ஆய்வு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாடல்தான் சரியான மாதிரி என்பதை முதல்வர் விஜயன் உணர்ந்துள்ளார்.

கேரளா குஜராத்தில் இருந்து. நிர்வாகம், தொழிற்துறை மற்றும் எரிசக்தி துறைகளில் நிறைய கற்றுகொள்ள வேண்டும். ஊழல், ஊதாரித்தனம் மற்றும் நேபோடிசம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே கேரளா வாழ முடியும். தோல்வி அடைந்த கேரளா மாடலை வைவிட்டு விட்டு வெற்றியடைந்த குஜராத் மாடலை கேரளாவில் அமல் படுத்த வேண்டும் என சுரேந்திரன் ட்வீட் செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சி முறையை பாராட்டியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக தேசிய துணைத்தலைவர் அப்துல்லா குட்டி கூறுகையில், குஜராத்தில் நல்லாட்சிக்கு உதவும் அமைப்பை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பும் கேரள அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.

மேலும் மாநில அரசு போக்குவரத்து பேருந்துகளை இயக்குவது குறித்து ஆய்வு செய்ய உத்திரபிரதேசத்துக்கும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் குஜராத்துக்கு அதிகாரிகளை அனுப்பும் முடிவுக்கு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் கேரள அரசை விமர்சித்துள்ளன.

Also Read: போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் கட்டப்படும்: கோவா முதல்வர்

கேரளா காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறுகையில், குஜராத் மாதிரியை கேரள அரசு பின்பற்றுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். சிறுபான்மையினரின் ரத்தத்தில் ஊறிய தீவிர இந்துத்துவா சித்தாந்தங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடம் தான் குஜராத் என அவர் கூறியுள்ளார்.

இந்திய முஸ்லீம் லீக் தலைவர் குன்ஹாலிக்குட்டி கூறுகையில், குஜராத்திடம் இருந்து கேரளா கற்று கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் தனது பதிவில், அரசு எடுத்த இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், புதிய விஷயங்களை படிப்பதில் அரசியல் தடையாக இருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: பாகிஸ்தானில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை: AICTE அதிரடி

சமீபத்தில் டெல்லி மாதிரியை கேரளா பின்பற்றுகிறது, அதனை கற்று கொள்ள கேரளா அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளது என ஆம் ஆத்மி தெரிவித்து இருந்த நிலையில். டெல்லி மாடலை கேரளா பின்பற்றவில்லை, டெல்லிதான் கேரள மாடலை பின்பற்றுகிறது. டெல்லிக்கு கேரளா சார்பில் எந்த அதிகாரிகளையும் அனுப்பவில்லை என கூறி டெல்லி அரசின் கூற்றை மறுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.