நார்வே நிறுவனத்திற்கு 2 தன்னாட்சி மின்சார பார்ஜ்களை டெலிவரி செய்த கொச்சி ஷிப்யார்ட்..!

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) ஞாயிற்று கிழமை நார்வேயை தளமாக கொண்ட ASKO Maritime AS க்காக இரண்டு தன்னாட்சி மின்சார பார்ஜ்களை வழங்கியது.

இந்த இரண்டு மின்சார பார்ஜ்களும் ஒரு பெரிய போக்குவரத்து கப்பலில் நார்வேயிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ASKO திட்டமானது நார்வேயில் ஒரு லட்சிய திட்டமாகும். இது ஒஸ்லோ ஃப்ஜோர்ட்ஸ் முழுவதும் உமிழ்வு இல்லாத பொருட்களை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்ட பசுமை கப்பல் திட்டமாகும்.

ASKO Maritime நார்வேயின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியாகும். 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் லாஜிஸ்டிக் சேவையில் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நார்வே அரசாங்கத்தால் ஒரளவு நிதியளிக்கப்படுகிறது.

இது தன்னாட்சி தொழில்நுட்பத்தில் உலக அளவில் பிரபலமான M/S Kongsberg மற்றும் மிகப்பெரிய கடல்சார் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான M/S Wilhelmsen ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்த கப்பல்கள் M/S Masterly ஆல் நிர்வகிக்கப்படும். 67 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல்கள், 450 டன் எடை கொண்டது, ஒரு மணி நேரத்திற்கு 1,846 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் முழு எலக்ட்ரிக் டிரான்ஸ்போர்ட் படகுகளாக வழங்கப்படுகின்றன.

இது குறித்து பேசிய கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் வணிக வளர்ச்சியின் பொது மேலாளர் சிவராம் நாராயண சுவாமி, கொச்சி கப்பல் கட்டும் தளம் மிகவும் லட்சியமான எதிர்கால திட்டத்தை நாட்டுக்காக கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளனர் மற்றும் இந்த திட்டத்தில் பணியாற்ற கொச்சி கப்பல் கட்டும் தளத்தை தேர்வு செய்துள்ளனர்.

Also Read: நாட்டின் முதல் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை தயாரிக்க உள்ள ஐதராபாத் நிறுவனம்..!

இந்த திட்டம் 2019 ல் விவாதிக்கப்பட்டு, 2020ல் ஒப்பந்தம் கையெழுத்தானது என கூறினார். மின்சார கப்பல் பற்றி கூறிய சுவாமி, இது 16 ஐரோப்பிய யூனியன் ட்ரெய்லர்களை கொண்டு செல்லக்கூடியது மற்றும் ஒரு துறைமுகத்தில் இருந்து மற்றொரு துறைமுகத்திற்கு டிரெய்லர்களை அனுப்பும் வகையில் உள்ளது.

Also Read: அணு ஆயுத ஏவுகணை பற்றிய தகவலை பாகிஸ்தான் உளவாளிக்கு பகிர்ந்த DRDO பொறியாளர்..

ஒரு மணி நேரத்திற்கு 1,846 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும். இந்த கப்பல்கள முழு தன்னாட்சி கப்பலாகவும் இயங்கும். அதாவது போர்டில் பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். கணினியில் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் அனைத்து செயல்பாடுகளையும் போர்ட் கவனித்து கொள்ளும். இது உலகத்திற்கே ஒரு பாதையை உடைக்கும் புரட்சிகரமான திட்டம் என தெரிவித்துள்ளார்.

Also Read: மலேசிய போர் விமான ஆர்டருக்கான போட்டியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை..!

Leave a Reply

Your email address will not be published.