வானியல் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவின் லடாக் ஆய்வகம் சிறந்த இடம்: ஆராய்ச்சியாளர்கள்

இந்தியா சிறந்த விண்வெளி மற்றும் வானியல் ஆய்வுக்கான தளமாக மாறி வருகிறது. இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் வானியல் ஆய்வுக்கு ஏற்றவையாக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய வானியல் ஆய்வகங்களை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் உயரமான இடங்களில் உள்ள வானியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை 8 ஆகும். இதில் 3 ஆய்வகங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. ஹன்லேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வகம், லடாக் மற்றும் தேவஸ்தால் ஆகும். திபெத்தில் உள்ள அலி ஆய்வகம், டோக்கியோ அட்டகாமா ஆய்வகம், மெக்சிகோவின் தேசிய ஆய்வகம், சிலியின் பரனல் ஆய்வகம், தென்னாப்ரிக்காவின் பெரிய தொலைநோக்கி ஆய்வகம் ஆகியவை ஆகும்.

இதில் மற்ற நாடுகளை விட இந்தியாவின் ஹன்லேவில் உள்ள ஆய்வகம் குறைந்த காற்று மாசுபாடு, வறண்ட வானிலை மற்றும் குறைவான மழை, குறைவான ஒளி மாசுபாடு, தெளிவான வானிலை என ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்ற இடமாக விஞ்ஞானிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் பிற நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இந்திய ஆய்வகம் உட்பட உலகின் எட்டு ஆய்வகங்களிலும் மேக மூட்டம் மற்றும் 41 ஆண்டுகள் செயற்கைகோள் தரவுகளை ஆய்வு செய்தனர். இதில் இந்தியாவின் ஹன்லே ஆய்வகம் வருடத்தில் 270 நாட்கள் தெளிவான இரவுகளை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Also Read: உலகிலேயே வெண்மையான பெயிண்டை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானி குழு.. புவி வெப்பமடைதலை குறைக்க உதவும்..

இதேபோல் திபெத்தில் உள்வ அலி ஆய்வகமும் தெளிவான இரவுகளை கொண்டுள்ளது. இரண்டு ஆய்வகங்களுக்கும் உள்ள இடைவெளி 80 கிலோ மீட்டர். ஆனால் திபெத் ஆய்வகம் சீனாவின் தன்னாட்சி பகுதியின் கீழ் வருகிறது. மத்திக ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள ஆய்வகய்களில் மேக கூட்டங்களால் இடையூறு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் இந்த ஆய்வகத்தின் மூலம் வானிலை ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆய்வகங்களுக்கு அருகாமையில் இன்னும் சில ஆய்வகங்கள் வர வாய்ப்பு உள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

Also Read: சுற்றுலாவை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்.. சர்வதேச சுற்றுலா அட்டவணையை வெளியிட்ட IRCTC..

Leave a Reply

Your email address will not be published.