இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது லேண்டிங் கிராஃப்ட் யூடிலிட்டி L58 கப்பல்..

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது லேண்டிங் கிராஃப்ட் யூடிலிட்டி L58 கப்பல்..

இந்த கப்பல் பொதுத்துறை நிறுவனமான கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிபில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 900 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது. இந்த கப்பலில் 5 அதிகாரிகள் மற்றும் 50 மாலுமிகள் உள்ள நிலையில் கூடுதலாக 160 வீரர்களை சுமந்து செல்ல முடியும். இந்த கப்பல் 28 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இது 63 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த கப்பலில் வீரர்கள், கவச வாகனங்கள், போர் பீரங்கிகள், மேலும் பல வாகனங்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல முடியும். மேலும் இதனை கடலோர ரோந்து பணி, தேடுதல் மற்றும் மீட்பு, நிவாரண பணி, பேரிடர் கால மீட்பு பணி உள்ளிட்ட பல பணிகளுக்கு இந்த கப்பலை பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த கப்பலை அனைத்து காலநிலையிலும் இயக்க முடியும். மேலும் இவற்றில் 2 CRN 91 துப்பாக்கிகள் உள்ளன. மேம்பட்ட ரேடார் அமைப்பு இருப்பதால் இவற்றை கண்காணிப்புக்கும் பயன்படுத்த முடியும். இது LCU Mark-IV வகுப்பின் கடைசி கப்பல் ஆகும். சாதாரண பொருட்கள் முதல் கனரக வாகனங்கள் வரை எடுத்து செல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *