சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பஞ்சாபிற்கு துணை ராணுவத்தை அனுப்ப DGP கோரிக்கை..

பஞ்சாப் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) வீரேஷ் குமார் பவ்ரா, பஞ்சாபில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை சமாளிக்க உடனே துணை ராணுவ படைகளை பஞ்சாபிற்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த மாதம் மே 10 அன்று SAS நகர் மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறை உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் இரவு 7.45 மணி அளவில் நடந்தது. ராக்கெட் ப்ரொபல்டு கிரானேட் பயன்படுத்தி உளவுத்துறை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு சீக்ஸ் ஃபார் ஜஸ்டீஸ் என்ற சீக்கிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் பாகிஸ்தானின் ISI அமைப்பினர் தாக்குதலை தொடங்கியாதாக பஞ்சாப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலிசார் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். வழக்கில் கைதுசெய்யப்பட்டப்பட்டவர்களை விசாரித்த பிறகு துணை ராணுவ படைகளை பஞ்சாபிற்கு அனுப்ப மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

Also Read: பாகிஸ்தானியர்கள் நமது எதிரி அல்ல.. புனேவில் நடந்த ஈத் மிலன் நிகழ்ச்சியில் சரத் பவார் பேச்சு..

மேலும் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வகுப்புவாத சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதில் முக்கியமான ஒன்று பாட்டியாலா வன்முறை. மா காளி கோயில் ஏப்ரல் 29 அன்று காலிஸ்தானியர்களால் தாக்கப்பட்டது. சிவசேனாவுடன் இணைந்த இந்து தலைவர் ஒருவர் பாட்டியாலாவில் காலிஸ்தான் எதிர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காலிஸ்தானி சீக்கியர்கள் அணிவகுப்புக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை வன்முறையாக மாறியது. காலிஸ்தானி சீக்கியர்கள் கோயிலை தாக்கி, கோயிலுக்கு வெளியே இருந்த கடைகளை சேதப்படுத்தினர்.

Also Read: சிறுபான்மையினருக்கு கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்த பள்ளிகளுக்கு டெல்லி அரசு உத்தரவு..?

மேலும் சில மாதங்களாக பஞ்சாபில் அதிக அளவில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இவை அனைத்தும் பஞ்சாபிற்கு அனுப்பப்படுவதாக போலிசார் கூறியுள்ளனர். தற்போது சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதால் துணை ராணுவப்படையை அனுப்புமாறு டிஜிபி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Also Read: PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத அமைப்புகள்: கேரள உயர்நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published.