நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் 77 சதவீதமும், உயிரிழப்பு 85 சதவீதமும் குறைந்துள்ளது..!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் கூறுகையில், இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்ந்த வன்முறையில் 77 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் குறைந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடதுசாரி தீவிரவாதத்தால் 2258 ஆக இருந்த வன்முறை சம்பவங்கள் 2021 ஆம் ஆண்டு 509 ஆக குறைந்துள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021ல் 77 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் மரணங்கள் 2010 ஆம் ஆண்டு 1005 ஆக இருந்த நிலையில் 85 சதவீதம் குறைந்து 2021 ஆம் ஆண்டு 147 ஆக குறைந்துள்ளது என நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்து போராட 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை உறுதியுடன் செயல்படுத்தியதால் இது சாத்தியமானதாக கூறியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 96 இல் இருந்து தற்போது 2021ல் 46 ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவற்றை கண்காணிக்கும் காவல் நிலையங்கள் 464 ல் இருந்து 191 ஆக குறைந்துள்ளதாகவும் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

Also Read: காங்கோவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள். 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு..

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நக்சலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார். மேலும் நக்சல்களின் முக்கிய நபர்களுடனும் பேசி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பல இடதுசாரி தீவிரவாதிகள் சரணடைந்தனர். இதனால் பாதிப்பு குறைந்துள்ளது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பல குறிப்பிட்ட வளர்ச்சி பணிகளை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மோடி அரசு சாலை பணிகளை விரிவாக்குதல், தொலைதொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், திறன் மற்றும் நிதி சேர்க்கை ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது.

Also Read: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கைது செய்த உ.பி காவல்துறை..!

மேலும் இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. நக்சல்களுக்கு எதிரான போரில் நவீன கருவிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் படைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.