ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல்.. முன்னேறிய இந்தியா.. பின்னடைவில் பாகிஸ்தான்..

பெர்லின்-நேஸ் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல் நிறுவனம் ஊழல் புலனாய்வு குறியீட்டின் 2021வது ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் 0 முதல் 100 வரை மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. 0 என்பது ஊழல் நிறைந்த நாடாகவும் 100 என்பது மிகவும் சுத்தமான நாடு என வகை படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது, லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துதல், பொதுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கங்களின் திறன், லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை புகாரளிக்கும் நபர்களுக்கு சட்ட பாதுகாப்பு மற்றும் பொது விவகாரங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அணுகுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

180 நாடுகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 16 இடங்கள் சரிந்து 28 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 140வது இடத்தை பிடித்துள்ளது. 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு மோசமான வீழ்ச்சி இதுவாகும். 2010ல் பாகிஸ்தான் 146வது இடத்தை பிடித்தது. பாகிஸ்தானில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டு 100க்கு 32 ஆகவும், 2020 ஆம் ஆண்டு 100க்கு 31 மதிப்பென்னும் எடுத்திருந்த நிலையில் தற்போது 2021ல் 28 புள்ளிகளை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நயா பாகிஸ்தான் அதாவது புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என கூறியிருந்தார். இதுதான் அந்த புதிய பாகிஸ்தானா என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல் அறிக்கையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் எதிர்கட்சியான PML-N தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்களின் கொள்ளையை நாடு இனி தாங்காது, ஊழல் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் எவ்வித மாற்றமும் இன்றி 40 புள்ளிகளுடன் இந்தியா 85லது இடத்தில் உள்ளது. 2012 ஆம் ஆண்டு 94வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது சிறிது முன்னேறி 85வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஜெர்மனி ஆசியவை சுத்தமான நாடுகளின் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. இங்கிலாந்து 78 புள்ளிகளுடன் 11வது இடத்தையும், ஹாங்காங் 76 புள்ளிகளுடன் 12வது இடத்தையும் பிடித்துள்ளன.

அமெரிக்கா 67 புள்ளிகளுடன் 27வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுடன் மாலத்தீவும் 85வது இடத்தை பிடித்துள்ளன. வங்கதேசம் 26 புள்ளிகளுடன் 147வது இடத்தையும், இலங்கை 37 புள்ளிகளுடன் 102வது இடத்தையும் பிடித்துள்ளன. ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் குவாத்தமாலா 150வது இடத்தை பிடித்துள்ளன.

180 நாடுகள் கொண்ட பட்டியலில், வடகொரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் 16 புள்ளிகளுடன் 174வது இடத்தை பிடித்துள்ளன. சோமாலியா மற்றும் சிரியா 178வது இடத்தை பிடித்துள்ளன. தெற்கு சூடான் 11 புள்ளிகளுடன் 180வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த காலத்தில் 131 நாடுகள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50 புள்ளிகளுக்கு கீழே உள்ளதாக அறிக்ளகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.