லவ் ஜிகாத்: உ.பி.யில் அடையாளத்தை மறைத்து இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞன்..
டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவர் தன்னை இந்துவாக கூறிகொண்டு இந்து இளம்பெண் ஒருவரை திருமணம் செய்த சம்வபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய இளைஞன் ஷாஜாத் அன்சாரி, டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவரும் பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் தனது உறவினரை பார்க்க வரும் போது ஷாஜாத் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார்.
ஷாஜாத் அன்சாரி அந்த உறவினரிடம் இருந்து பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கி அந்த பெண்ணுடன் பேச ஆரம்பித்துள்ளார். பின்னர் உறவினரை பார்க்க வரும்போதெல்லாம் ஷாஜாத் அன்சாரியும் அந்த பெண்ணை சந்திப்பது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பெண் உத்திரபிரதேசம் அசம்கரை சேர்ந்தவர்.
பின்னர் இந்த உரையாடல் 6 மாதங்கள் நீடித்த நிலையில், ஷாஜாத் அன்சாரி தன்னை ரவீந்தரனாக காட்டி கொண்டு ஒரு இந்து கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஷாஜாத் அன்சாரி தொழிற்சாலைக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க தொடங்கினர். தொழிற்சாலை மூடப்பட்டதால் அவர் தனது கிராமத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பினார்.
பாதிக்கப்பட்ட பெண் கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு அவர் ஒரு முஸ்லிம் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்தால் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ஷாஜாத் அன்சாரி தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
ஆதரவற்ற நிலையில் இருந்த அவர் பன்ஷிதர் நகர் மகளிர் காவல்நிலையத்துக்கு சென்று காவல் கண்காணிப்பாளரிடம் நியாயம் கேட்டுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக டிசிபி ரமேஷ் கோலப்பிடம் கூறியுள்ளார். அவர் ஏற்கனவே ஏப்ரல் மாதம் கத்வா எஸ்பியிடம் புகார் செய்துள்ளார். அந்த பெண் தற்போது கத்வா ரயில் நிலையத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.