லக்னோ ஆலையில் ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்க திட்டம்..?

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சிகளுடன் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்க உள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பாகும். இந்த நிலையில் இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களால் பாதுகாப்பு தொழிற்நுட்பம் மற்றும் சோதனை மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மையம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. கட்டுமானத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் டி ரானே கூறுகையில், லக்னோவில் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் முடிவடைந்த உடன் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு தொடங்கப்படும். அனைத்தும் சரியாக நடந்தால் தற்போதைய பதிப்பின் முதல் பிரம்மோஸ் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும்.

பிரம்மோஸ் ஏவுகணை ஜூன் 3 ஆம் தேதி மாநில தலைநகரில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியில் பிரம்மோஸ் ஏவுகணை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரமோஸ் உற்பத்தியை தொடங்க பிரதமர் தனி கவனம் செலுத்தி வருகிறார். ஏவுகணையின் சாத்தியக்கூறு ஆய்வு முடிவடையும் நிலையில், அமைப்பின் விரிவான வடிவமைப்பு தொடங்கும். அதனை தொடர்ந்து கணினி சோதனைகள் நடைபெறும்.

Also Read: இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு 3000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை.. ஒப்பந்தம் கையெழுத்தானது..

இரண்டு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு போர் கப்பல், நீர்மூழ்கி கப்பல், போர் விமானம் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை தயாரிக்கப்பட உள்ளது. பிரம்மோஸ் NG ஏவுகணைகளை வெளியிடுவதற்கான காலக்கெடு இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

பிரம்மோஸ் NG சிறியது, இலகுவானது மற்றும் சிறந்த பரிணாமங்களை கொண்டுள்ளது. பல நவீன ராணுவ தளங்களில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த சில ஆண்டுகளில் இந்திய இராணுவத்தின் போர் திறனை மேலும் அதிகரிக்கும். இந்த திட்டம் 500 போறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் மறைமுகமாக 5,000 பேருக்கும், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய துணை பிரிவுகள் மூலம் சுமார் 10.000 பேருக்கு வேலை கிடைக்கும்.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.