மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு தீ வைப்பு.. ஆளும் கட்சி எம்.பியை அடித்து கொன்ற போராட்டகாரர்கள்..?

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பிரதமர் மகிந்த ராஜபகசே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் போராட்டகாரர்கள் மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு தீ வைத்தனர்.

மேலும் போராட்டகாரர்களுக்கும் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா அடித்து கொல்லப்பட்டார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த 6 ஆம் தேதி அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதற்கு ராஜபக்சேக்களின் தவறான கொள்கையே காரணம் என கூறி அவர்கள் பதவி விலக வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read: ரஷ்யா உக்ரைன் மோதல்: கிடப்பில் போடப்பட்ட Su-30 MKI போர் விமான திட்டம்..

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் குருணாகல என்ற பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் பூர்விக வீட்டை போராட்டகாரர்கள் நேற்று இரவு கல்வீசி தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்சே உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு நகரில் உள்ள வீட்டில் வசித்து வருவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதுதவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களின் வீட்டை போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை அதிபர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என போராட்டகாரர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

மேலும் இலங்கையின் வடமேற்கு நகரமான நித்தம்புலாவில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி காரை போராட்டகாரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்புக்காக அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் எம்,பியை அடித்து கொன்றனர். இந்த கலவரத்தில் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவம் இறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.