குவாட் நாடுகளின் மலபார் போர் பயிற்சி தொடங்கியது.. எங்கு தெரியுமா..?

குவாட் அமைப்பில் உள்ள இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி இந்த முறை பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடைபெறுகிறது. இதற்கு மலபார்-21 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் அமெரிக்க கடற்படை, ஜப்பான் கடற்படை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படையும் பங்கேற்கின்றன.

இந்த மலபார்-21 கூட்டுப்போற் பயிற்சி ஆகஸ்ட் 26 முதல் 29 வரை நடைபெறுகிறது. இந்த போர் பயிற்சியில் நாசக்கார போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்கின்றன. இந்த பயிற்சியில் எதிரிகள் கப்பலை அழிப்பது, மீட்பு பணி, வீரர்களை இடம் மற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த போர் பயிற்சியில் இந்தியாவின் INS ஷிவாலிக், INS காட்மாட், P8I ரோந்து விமானம் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களும் பங்கேற்கின்றன. இந்த பயிற்சி பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடைபெறுவதால் இது சீனாவுக்கு சவால் விடுவதாகவே கூறப்படுகிறது.

தென்சீனக்கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் மலபார்-21 போர் பயிற்சி பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த குவாட் அமைப்பில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.