இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க உள்ள மலேசியா..?

இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதத்திற்குள் மலேசிய விமானப்படை இந்தியா வர உள்ளது.

இந்தியாவின் LCA தேஜஸ் போர் விமானம் பாகிஸ்தான் சீன கூட்டு தயாரிப்பான JF-17 போர் விமானம் மற்றும் தென்கொரியாவின் T 50 போர் விமானத்தை விட நவீனமானது என கூறப்படுகிறது. இதனால் தான் மற்ற நாட்டு போர் விமானங்களை விட மலேசியா இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளது.

மலேசிய விமானப்படை குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தேஜஸ் விமானத்தின் சிறப்புகள், திறன், சோதனை ஆகியவை பற்றி எடுத்துறைக்க உள்ளன. மேலும் மலேசியா விமானிகளுக்கு போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் பழுது பார்த்தல், பராமரிப்பு ஆகியவற்றையும் இந்தியா மலேசிய விமானப்படைக்கு வழங்குகிறது.

ஏற்கனவே இந்தியா 83 தேஜஸ் போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், அதில் முதல் கட்டமாக 13 தேஜஸ் போர் விமானங்களை மலேசியாவுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா 24 போர் விமானங்களை வாங்க உள்ள நிலையில் முதல் கட்டமாக 13 விமானங்கள் வழங்கப்படுகிறது.

தேஜஸ் போர் விமானத்தை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மலேசியாவுக்கு வழங்க உள்ள போர் விமானம் தேஜஸ் MK 1 என கூறப்படுகிறது. மலேசிய விமானப்படை இந்தியா வரும் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *