மலேசிய விமான ஒப்பந்தம்: இந்தியா மற்றும் துருக்கி இடையே போட்டி.. வெளியேறிய சீனா..?

மலேசிய விமானப்படைக்கு இலகுரக தாக்குதல் போர் விமானம் வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவும் துருக்கியும் போட்டியில் இருப்பதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசிய அரசாங்கம் இந்த வருடம் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக 18 இலகுரக போர்விமானங்களை வாங்குவதற்கான டெண்டரை வெளியிட்டது. அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பல நாடுகள் இந்த டெண்டரில் கலந்து கொண்டன. இந்த டெண்டரில் ஏலதாரர்களையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளையும் மலேசிய அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் டெண்டர் விரைவாக சேகரிக்கப்பட்டு ஆறு ஏலதாரர்கள் மலேசியாவால் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அறிக்கையின் படி, துருக்கியின் துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தை பிடிப்பதில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த டெண்டரில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்துடன் HAL, மிக்-35 விமானத்துடன் மலேசியாவின் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி சிஸ்டம்ஸ், L-15 விமானத்துடன் சீனாவின் கேட்டிக், FA-50 போர் விமானத்துடன் தென்கொரியாவின் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ், M-346 போர் விமானத்துடன் இத்தாலியின் லியோனார்டோ மற்றும் ஹார்ஜெட்டுடன் துருக்கியின் TAI ஆகிய நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.

சீனா மற்றும் பாகிஸ்தானின் தயாரிப்பான JF-17, ரஷ்யாவின் யாக்-130 மற்றும் அமெரிக்காவின் T7A போட்டியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இல்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் சீன போர் விமானங்கள் மலேசிய வான்பரப்பில் நுழைந்த சிறிது நேரத்திலேயே இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டது.

மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 18 இலகுரக போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. அவற்றில் 30 சதவீதம் மலேசியாவில் உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி அல்லது அசெம்பிள் மலேசியாவின் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்க சீனா போட்ட திட்டம்..

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியா மற்றும் துருக்கி முன்னனியில் உள்ளன. துபாய் விமான கண்காட்சியில் மலேசியா பார்வையாளர்களை குறிவைத்து இந்தியாவின் தேஜஸ் போவிமானம் சாகசங்களை செய்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். மாதவன் கூறுகையில், மற்ற போட்டி விமானங்களின் குறைகளை சுட்டிக்காட்டி, மலேசியாவின் தரத்திற்கு ஏற்ப தேஜஸ் போர் விமானத்தில் மாற்றம் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

மேலும் இப்பகுதியில் பல தளவாட தளங்களை நிறுவுவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்தார். மலேசியா தவிர அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் வெற்றி பெற்றால் தேஜஸ் போர்விமானத்தை வாங்கும் முதல்நாடாக மலேசியா இருக்கும்.

Also Read: J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..

Leave a Reply

Your email address will not be published.