மாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.

இந்தியாவும் மாலத்தீவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. மொத்தம் 143 ஓட்டுக்கள் ஆதரவாகவும், 48 ஓட்டுகள் எதிராகவும், 48 ஓட்டுக்கள் வாக்களிகாமலும் உள்ளனர். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அப்துல்லா ஷாஹித் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த பதவிக்கு ஆண்டுதோறும் தேர்தல் நடைப்பெறும். இந்த முறை 76 வது தலைவருக்கான தேர்தலில் மாலத்தீவு வெற்றிப்பெற்றுள்ளது. மாலத்தீவு ஐ.நா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.

மாலத்தீவு அப்துல்லா ஷாஹீத்தின் வேட்புமனுவை 2018 ஆம் ஆண்டு அறிவித்தது. அப்போது வேறு யாரும் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடவில்லை. அப்துல்லா ஷாஹித் ராஜதந்திர முறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி சல்மாய் ரசோல் இந்த பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் கடந்த 2020 ஆண்டு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்க்லா மாலத்தீவு பயணம் மேற்கொண்ட போது ஐ.நா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மாலத்தீவுக்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு இரண்டு நாடுகளும் இந்தியாவின் நட்பு நாடுகள் என்றாலும் மாலத்தீவுக்கு ஏற்கனவே ஆதரவு அளித்ததால் இந்த தேர்தலில் மாலத்தீவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *