மெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் தேசிய வங்கியில் 13,000 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சி டோமினிக்காவில் இருந்து விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மெகுல் சோக்சி டோமினிக்கா நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் டோமினிகா போலிசார் அவரை கைது செய்து வீட்டு காவலில் அடைத்தனர். அப்போது வெளியான புகைபடத்தில் மெகுல் சோக்சி கண்கள் சிவந்தும் உடம்பில் காயங்களுடனும் இருந்தார்.

டோமினிக்காவில் அவர் சட்டவிரோதமாக இருப்பதால் அவரது குடியுரிமை நாடான ஆன்டிகுவா நாட்டிற்கு மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆன்டிகுவா பிரதமர் கூறுகையில் மெகுல் சோக்சி விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என கூறப்பட்ட நிலையில் தான் மெகுல் சோக்சி சட்ட விரோதமாக டோமினிகா நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்டிகுவாவில் வசித்துவரும் மெகுல் சோக்சி வலுகட்டாயமாக டோமினிகா நாட்டிற்கு கடத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் டோமினிகா நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக இந்தியா சார்பில் இரண்டு சிபிஐ அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு டோமினிகாவில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க பட்டுள்ளதையும், அவர் இந்திய குடியுரிமை வைத்துள்ளதையும் வாதாடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவர் மீது வங்கி மோசடி, பண மோசடி, கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *