ராஜஸ்தானில் விபத்தில் சிக்கிய Mig-21 போர் விமானம்.. விமானி உயிரிழப்பு..

ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mig-21 விமானம் வெள்ளிக்கிழமை மாலை விபத்தில் சிக்கியது. பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானி விங் கமாண்டர் ஹர்ஷித் சின்கா உயிரிழந்தார்.

ஜெய்சல்மோரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சாம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலைவன தேசிய பூங்கா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக ஜெய்சல்மார் எஸ்பி அஜய் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு போலிசார் உடனடியாக சென்றதாக போலிசார் தெரிவித்தார்.

இந்திய விமானப்படை தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று(நேற்று) மாலை 8.30 மணி அளவில் இந்திய விமானப்படையின் Mig-21 விமானம் பயிற்சியின் போது மேற்கு செக்டாரில் விபத்துற்கு உள்ளானது. விமான விபத்தில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்காவின் சோகமான மறைவை இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறது. துணிச்சலான இதயத்தின் குடும்பத்துடன் IAF உறுதியாக நிற்கிறது என கூறப்பட்டுள்ளது.

பாலைவன தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு நபர், விமானம் கீழே விழுவதற்கு முன் தீப்பிடித்து எரிந்ததாக கூறியுள்ளார். இந்த போர் விமானம் சுதாசரி அருகே மணல் திட்டுகளில் விழுந்து நொறுங்கியதாக சாம் காவலர் தல்பத் சிங் தெரிவித்துள்ளார். விமானியின் மறைவுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது இரங்கல் செய்தியில், விங் கமாண்டர் ஹர்ஷித் சின்கா மேற்கு செக்டாரில் பயிற்சியின் போது Mig-21 விமானம் விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்தார் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் வலிமை பெற பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Also Read: சீனாவின் உதவியுடன் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வரும் சவுதி அரேபியா..?

ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா இந்திய விமானப்படை விமானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராஜ் பவன் வெளியிட்ட அறிக்கையில், ஜெய்சல்மார் மாவட்டத்தில் Mig-21 விமான விபத்தில் விங் கமாண்டர் திரு.ஹர்ஷித் சின்ஹா ஜியின் அகால மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. மாண்புமிகு ஆளுநர் திரு.கல்ராஜ் மிஸ்ரா ஜி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: அதிவேக வான்வழி இலக்கு HEAT அபயாஸ் ட்ரோன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய DRDO..

மீண்டும் இந்தியாவின் நீண்டகால போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. Mig-21 பைசன் விமானத்தின் நான்கு படைபிரிவுகள் இயங்குகின்றன. ஒவ்வொரு படைபிரிவிலும் 16 முதல் 18 போர் விமானங்கள் உள்ளன.இந்த Mig-21 விமானங்கள் படிப்படியாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் நிறுத்தப்படும் என ஏற்கனவே கூறப்பட்டது. சோவியத் விமானமான Mig-21 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

Also Read: Z ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள CRPF பெண் கமாண்டோக்கள்..

இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் 874 Mig-21 வகைகளில் 60 சதவீதத்திற்கும் மேல் உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கடந்த ஆறு தசாப்தங்களில் 400க்கும் மேற்பட்ட விபத்துக்களில் 200க்கும் மேற்பட்ட விமானிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் தான் விங் கமாண்டர் (இப்போது குரூப் கேப்டன்) அபிநந்தன் பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தானின் பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை வீழ்த்தினார். Mig-21 போர் விமானம் மூலம் F-16 னை வீழ்த்திய ஒரே விமானி அபிநந்தன் தான் என்ற வரலாறு எழுதப்பட்டது.

Also Read: நடுவானில் பாதையை மாற்றும் குறுகிய தூர பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.