லடாக்கின் சின்குன் லாவில் புதிய சுரங்கப்பாதையை கட்டமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..?

லடாக்கில் எல்லைப்பகுதியில் 4.2 கி.மீ சுரங்கப்பாதைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்திட்டம் தொடர்பான உயர் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதனை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மணாலி முதல் லே வரையில் அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தும் வகையில் சுரங்கச்சாலை ஒன்றை 5,091 மீட்டர் உயரமுள்ள ஷின்குன் லா பாஸின் கீழ் 4.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க எல்லை சாலைகள் அமைப்பை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை பணிகளை 2024 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஷின்குன் லாவில் புதிதாக 13.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எல்லை சாலைகள் அமைப்பு அல்லது BRO இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

சீனா இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொள்ளும் முன்பே இந்த திட்டத்தை NHIDCL உருவாக்கி பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதை மூலம் வருடம் முழுவதும் துருப்புகளை விரைவாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும். மேலும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் கொண்டு செல்ல முடியும்.

இந்த 4.2 கி.மீ நீளமுள்ள ஷின்குன் லா சுரங்க சாலையின் செலவு 1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 297 கிலோமீட்டர் நீளம் கொண்ட டார்ச்சா-படும்-நிம்மு சாலையில் 100 கி.மீ இரட்டை சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை மூலம் சியாச்சினுக்கு விரைவாக செல்ல முடியும். உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று குணமடைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

2 thoughts on “லடாக்கின் சின்குன் லாவில் புதிய சுரங்கப்பாதையை கட்டமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *