பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக வேலைவாய்ப்பு துறையிலும் பாகுபாடு நிலவுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையம், சமமற்ற குடிமக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்பு ரீதியான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற தலைப்பின் கீழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் வேலைவாய்ப்பு துறையில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத 80 சதவீதத்தினர் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அரசு துறைகளில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இன்னும் பாதி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. மேலும் வேலை செய்யும் இடங்களில் போதிய பாதுகாப்பு இல்லாமை, பாதுகாப்பற்ற வேலை செய்யும் இடங்கள், காயமடைந்தவர்கள் அல்லது வேலை செய்யும் போது இறந்தவர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்குதல் ஆகியவை கூறப்பட்டுள்ளது.
மேலும் சமூக புறக்கணிப்பு, களங்கம், பாகுபாடு மற்றும் துப்புரவு பணியாளர்கள் இறப்பு போன்றவையும் சிறுபான்மையினர் சந்திப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்கும் அல்லது காயமடையும் இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வழங்குதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிராக விளம்பரங்களை தடை செய்யவும், அடிப்படை ஊதிய விகிதத்தில் நிரப்பப்படும் சிறுபான்மையினர் வேலைவாய்ப்புகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம், ஒவ்வொரு மாகாணத்தின் தலைமை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
Also Read: ஈராக்கில் பீரங்கி தாக்குதல்.. துருக்கி ஈரான் இடையே முற்றும் மோதல்..
அதில் சர்வதேச அளவில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதர் மினல்லாஹ் கூறுகையில், அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் செயலில் ஈடுபடும் வரை மாநாடுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் போதாது என கூறியுள்ளார்.
Also Read: சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
சட்டத்தின் ஆட்சியை துஷ்பிரயோகம் செய்வதால் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன. அரசியலமைப்பின் கீழ், ஒவ்வொரு குடிமகனும் சமமானவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைபடுத்துவதற்கான நிலை குறித்த அறிக்கையை சமர்பிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி அல்லது கவர்னர் கடமைப்பட்டிருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
Also Read: சாலமன் தீவை தொடர்ந்து மற்றொரு பசுபிக் நாட்டுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தம்..?