இந்தியாவுக்கு திரும்பியுள்ள 550க்கும் மேற்பட்ட பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள்..!

ராமலிங்கசாமி ரீ என்ட்ரி பெல்லோஷிப்பின் கீழ் 550 க்கும் மேற்பட்ட இந்திய உயிரி தொழிற்நுட்ப வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஜிதேந்திர சிங் ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளார். மேலும் பல விஞ்ஞானிகள் இந்தியா திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமலிங்கசுவாமி ரீ என்ட்ரி பெல்லோஷிப் என்பது பயோடெக்னாலஜி துறையின் மதிப்புமிக்க திட்டமாகும். 2006-07ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளை திரும்ப அழைத்து வரும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பயோடெக்னாலஜி அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் 36வது நிறுவன நாள் விழாவில் பேசிய ஜிதேந்திர சிங், வெளிநாடுகளில் உள்ள மேலும் பல விஞ்ஞானிகள் நாட்டில் உள்ள ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்களில் இருந்து பயனடைய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெல்லோஷிப்பை பெற்ற 550 விஞ்ஞானிகளில் 300 பேர் நாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் துறையின் மகத்தான ஆதரவின் காரணமாக உயிரி தொழிற்நுட்ப துறை விரைவான வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது உலகின் முதல் 12 உயிரி தொழிற்நுட்ப இடங்களுக்குள் ஒன்றாக இருப்பதாக சிங் தெரிவித்துள்ளார். பயோடெக்னாலஜி துறை நாடு முழுவதும் 15 தீம் அடிப்படையிலான தன்னாட்சி நிறுவனங்களை நிறுவியுள்ளதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுதவிர ஒரு சர்வதேச நிறுவனம், மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜிக்கான சர்வதேச மையத்தின் டெல்லி ஆய்வு மையம் மற்றும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான BIBCOL மற்றும் BIRAC ஆகியவை உயிரியல் உற்பத்தி மற்றும் தொடக்க கண்டுபிடிப்பு சுற்றுக்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.