ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு.. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி..

ஆப்கானிஸ்கானில் மசூதி ஒன்றில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்பை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வெள்ளிக்கிழமையான இன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் மகாணத்தின் பண்டார் கான் அபாத் மாவட்டத்தில் மதிய நேரத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதில் சம்பவ இடத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஹாஜித் தெரிவித்துள்ளார். குண்டு வெடித்த மசூதி ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் மசூதி என கூறப்படுகிறது. இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Also Read: ஆப்கனில் பெண்களின் உரிமை தொடர்பாக தாலிபானுக்கு ஜி20 நாடுகள் கேள்வி எழுப்ப வேண்டும்: இம்மானுவேல் மேக்ரான்

ஆப்கனில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஷியா பிரிவு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் குண்டு வெடித்தது. இதில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர்.

Also Read: காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

அதே போல் தாலிபான்களை குறி வைத்தும் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஹாஜித் தாயார் இறந்ததால் மசூதியில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அப்போது மசூதியின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு தாலிபான் உட்பட பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஏற்கனவே அமெரிக்க படைகள் வெளியேறிய போது நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்களும் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆப்கானிதான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பு.. பொதுமக்கள் இருவர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.