மோசடியில் ஈடுபட்ட 40 சீனர்கள் உட்பட 150 பேர் மீது FIR பதிவு செய்த மும்பை போலிஸ்..?
புதிய நிறுவனங்களின் பதிவு சட்டத்தை மீறி இந்திய நிறுவனங்களின் இயக்குநர்களாக மாறியதற்காகவும், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மோசடி செய்ததற்காகவும் 60 வெளிநாட்டினர் உட்பட 150 பேர் மீது மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) 34 FIR பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 60 வெளிநாட்டினர்களில் 40 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் சிங்கப்பூர், இங்கிலாந்து, தைவான், அமெரிக்கா, சைப்ரஸ், யுஏஇ மற்றும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மும்பை ROC யிடம் பொய்யான வாக்குமுலத்தை அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான அறிக்கைகளும் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்களின் முகவரிகளும் பின்னர் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 வழக்குகளில் 30க்கும் மேற்பட்ட சிஏக்கள், 30 நிறுவன சிஎஸ்க்கள் மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்களை கொண்டுள்ளன மற்றும் 2010 முதல் 2020 க்கு இடைபட்ட காலங்களில் மும்பை ROC யில் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை விசாரிக்க மூத்த காவல் ஆய்வாளர் வினய் கோர்படே மற்றும் இன்ஸ்பெக்டர் மணீஷ் அவலே ஆகியோர் அடங்கிய குழுவை காவல்துறை இணை ஆணையர் (EOW) நிகேத் கௌசிக் அமைத்துள்ளார்.
குற்றச்சாட்டின்படி, வெளிநாட்டு பிரஜைகள் இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களாக உள்ளனர். பின்னர் நிறுவன இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட இந்தியர்களை ராஜினாமா செய்ய வைத்து வெளிநாட்டினர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான பங்குகள் அவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் சில இயக்குநர்கள் மூன்று அல்லது நான்கு நிறுவனங்களில் ஒரே மாதிரியாக இருப்பதை கண்டறிந்துள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களில் ஒரு வெளிநாட்டவரை இயக்குநராக நியமிப்பது ஒரு நீண்ட செயல்முறை. இதனால் முதலில் நிறுவனங்களை உருவாக்கி அதில் இந்தியர்களை இயக்குநர்களாக நியமித்து பின்னர் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து வெளிநாட்டினர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: இந்திய கோதுமையை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து.. கோதுமை சப்ளையராக இந்தியா அங்கீகரிப்பு..!
பதிவு செய்யப்பட்ட FIR களில் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின கீழ் மோசடி, குற்றச்சதி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் நிறுவனங்கள் சட்ட பிரிவு 447 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரியில் முதல் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை EOW விசாரணைக்கு எடுத்துள்ளது.