தாய்லாந்து எல்லையில் மியான்மர் இராணுவம் வான்வழி தாக்குதல்.. குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு..

மியான்மர் இராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வரும் கரேன் போராட்ட குழு மீது தாய்லாந்து எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் மியான்மர் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. மியான்மர் இராணுவம் தாய்லாந்து எல்லையில் உள்ள ஆயுதமேந்திய போராளி குழு மீது தாக்குதல் நடத்தியது.

கரேன் தேசிய ஒன்றியம் என்ற ஆயுதமேந்திய போராளி குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கரேன் குழு மியான்மர் இராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். இந்த பகுதியில் தொலைதொடர்பு இல்லை என்பதால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என கரேன் செய்தி தொடர்பாளர் கூறினார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதியில் கரேன் போராட்ட குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு கரேன் மற்றும் மியான்மர் இராணுவம் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டதில் இருந்து சமீப காலமாக மியான்மர் இராணுவத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்ட நிலையில் கரேன் மற்றும் மியான்மர் இராணுவம் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவானது. கடந்த வாரம் இராணுவ தளபதி மற்றும் 10 மியான்மர் இராணுவ வீரர்களை கொன்றதாக கிரேன் தேசிய ஒன்றிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் மியான்மர் இராணுவம் தாய்லாந்து எல்லையில் உள்ள கரேன் தேசிய போராட்ட குழு மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *