விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லும் வழியில் மிராஜ் போர் விமானத்தின் டயரை திருடிய மர்மநபர்கள்..

லக்னோவின் பக்ஷி-கா-தலாப் விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு இராணுவ பொருட்களை ஏற்றிக்கொண்டு ட்ரக் ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது வழியில் மிராஜ் 2000 போர் விமானத்தின் டயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

நவம்பர் 27 அன்று இரவு ஜோத்பூர் விமானப்படை தளம் நோக்கி இராணுவ பொருட்களை ஏற்றிக்கொண்டு ட்ரக் சென்று கொண்டிருந்த போது லக்னோவின் ஷஹீத் சாலையில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. பக்ஷி-கா-தலாப் விமான தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானத்தளத்திற்கு ஹேம் சிங் ராவத் என்பவர் ட்ரக்கை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது ஷ்ஹீத் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதனை சாதகமாக பயன்படுத்தி ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் மிராஜ் போர் விமானத்தின் டயர் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அறுத்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து டிரைவருக்கு தெரிய வருவதற்குள் திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனை அடுத்து ட்ரக் டிரைவர் போலிசாருக்கு தகவல் கொடுக்க, போலிசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். நவம்பர் 27 அன்று இரவு 12:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை ஷஹீத் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ட்ரக் மெதுவாக நகர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி டயரை திருடி உள்ளதாக ட்ரைவர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

Also Read: J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..

இந்த திருட்டு நவம்பர் 27 அன்று நடைபெற்ற நிலையில் டிசம்பர் 1 அன்று போலிசார் FIR பதிவு செய்துள்ளனர். சந்தேகம்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என DCP அமித் குமார் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

லக்னோவின் பக்ஷி-கா-தலாப் விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு மிராஜ் 2000 போர் விமானத்தின் டயர்கள் ஐந்து எடுத்து செல்லப்பட்டுள்ளன. அதில் ஒரு டயரை செல்லும் வழியில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்க சீனா போட்ட திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.