கொலை மிரட்டலை கண்டித்து நிபுர் சர்மாவிற்கு ஆதரவாக நேபாள இந்துக்கள் பேரணி..
முகமது நபி தொடர்பாக முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய கருத்துக்கு பல இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து வரும் நிலையில். நேபாளத்தில் உள்ள இந்துக்கள் நிபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தி வருகின்றனர்.
முகமது நபி தொடர்பாக நுபுர் சர்மா கூறிய கருத்துக்கு உள்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பல வெளிநாட்டு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன மற்றும் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுகை முடிந்து பல இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை உத்திரபிரதேசத்தின் புனித நகரமான பிரயாக்ராஜில் முகமது நபி பற்றிய கருத்துக்காக நுபுர் சர்மாவிற்கு எதிராக போராட்டம் நடந்தது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போராட்டகாரர்கள் காவல்துறை அதிகாரிகளை தாக்கினர். நேற்று ஹவுராவில் உள்ள பஞ்ச்லா பஜாரில் நடந்த போராட்டத்தில் போராட்டகாரர்களுக்கும் காவர்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது.
பல இடங்களில் நுபுர் சர்மாவின் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்டும், தலையை துண்டிப்பது போன்ற கிராபிக்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு மிரட்டலும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நிபுர் சர்மாவிற்கு ஆதரவாக நேபாளம் இந்துக்கள் பேரணி நடத்தி வருவது வைரலாகி வருகிறது.
Also Read: நுபுர் சர்மாவின் தலை எங்காவதும், உடல் வேறு எங்காவதும்.. பகிரங்க மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பு..
கொலை மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாங்கள் நிபுர் சர்மாவை ஆதரிக்கிறோம் என்ற பதாகையுடனும், நேபாள தேசிய கொடியுடனும் ஜெய் ஶ்ரீ ராம் கோஷம் எழுப்பி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..
சில நாட்களுக்கு முன்னர் நெதர்லாந்து நாடாளுமன்ற தலைவர் கீர்ட் வில்டர்ஸ், நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அவருக்கு பலரும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதேபோல் காசியில் நடந்த தர்ம பரிஷத்தில் இந்து துறவிகள், நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்து, அவரை மிரட்டுபவர்களை தண்டிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.