பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமானப்படை தளம்.. மிக் மற்றும் தேஜஸ் போர் விமானங்களை நிறுத்த முடிவு.

பிரதமர் மோடி இன்று குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசாவில் இந்திய விமானப்படையின் புதிய விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது இந்தியாவின் பாதுகாப்பின் பயனுள்ள விமானநிலையம் என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த புதிய டீசா விமானப்படை தளம் குஜராத்தின் பூஜ் விமான தளத்திற்கும் ராஜஸ்தானில் அமைந்துள்ள உத்தரலாய் விமான தளத்திற்கும் இடைவெளியை குறைக்கும் என இந்திய இராணுவ தலைமை பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த டீசா விமானப்படை தளம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது. எல்லையின் மேற்கு பகுதி அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு அச்சுருத்தலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க முடியும். டீசா விமானப்படை தளம் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ளது.

இந்த விமானத்தளம் 2024 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்த விமான தளத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு பனஸ்கந்தாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் 1,000 கோடி ரூபாய் நிதியுதவியுடன் விமானப்படை தளத்திற்கு ஒப்புதல் பெற்றார். தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் விமான தளம் கட்டுமானத்திற்கு நிதியை விடுவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமான தளம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

டீசா விமானப்படை தளம், பாகிஸ்தானின் ஐதராபாதில் உள்ள மிர்பூர் காஸ் மற்றும் ஜகோபாத்தில் உள்ள ஷாபாஸ் F-16 விமானப்படை தளத்தில் இருந்து புறப்படும் பாகிஸ்தான் விமானங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும். இந்த டீசா விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை MiG-29UPG மற்றும் Tejas MK 1A போர் விமானங்களை நிறுத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.