அவசர காலத்தில் தரையிறங்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஓடுபாதைகள்..?

இந்திய விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஜம்முகாஷ்மீரில் புதிதாக விமானங்கள் தரையிறங்க வசதியாக 5 ஓடுபாதைகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக்கில் ஓடுபாதைகள் இருந்தாலும் அவசர காலத்தில் விமானங்கள் தரையிரங்குவதற்காக இந்த புதிய ஓடுபதைகள் கட்டமைக்கப்பட உள்ளன.

ஜம்முவில் 2 ஓடுபதையும், காஷ்மீரில் 2 ஓடுபாதையும், லடாக்கில் 1 ஓடுபாதையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதால் தற்போது மத்திய அரசு அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானின் பார்மரில் உள்ள NH-925 தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையின் சுகோய், C-17 உள்ளிட்ட பல விமானங்கள் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அவசர காலத்தில் இந்த சாலையில் தரையிரக்குவதற்காக சோதனை செய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த வாரம் இந்திய விமானப்படையின் ஏர் சீப் மார்ஷல் RKS பதாரியா கூறுகையில், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் தேஜஸ் மார்க் 2 விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விமான படையில் இணைக்கப்படும் என கூறியிருந்தார். இதன் மூலம் இந்திய விமானப்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்.

அதேபோல் இராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்காக 56 C-295MW போக்குவரத்து விமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஸ்பெயினின் ஏர் டிபென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

சரக்குகளை கையாள்வதற்கும் துருப்புகளை விரைவாக கொண்டு செல்வதற்கும் இது பயன்படும். ஒப்பந்தம் கையெழுத்து ஆன உடன் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்படும். மீதம் உள்ள விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.