ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவிற்குள் கடத்தியதாக 6 பேரை கைது செய்த NIA..

இந்திய எல்லைக்குள் ரோஹிங்கியா முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியதாக அதில் தொடர்புடைய ஆறு பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் (NIA) கைது செய்தனர்.

அசாம், மிசோரம், மேகாலயா ஆகிய பகுதிகளில் எல்லை வழியாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வங்கதேச முஸ்லிம்களையும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய உதவி செய்த சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பங்களாதேஷில் உள்ள அவரது நண்பர்களுடன் உடந்தையாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து டிசம்பர் 27, 2021 அன்று NIA வழக்கு பதிவு செய்தது.

இந்த கடத்தல் குழு அசாம், மேற்கு வங்கம், மேகாலயா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, மார்ச் 11 அன்று அசாம், மேகாலயா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் இந்த குழுவின் தலைவன் அசாமை சேர்ந்த குங்கும் அகமது சவுத்ரி பெங்களுரில் கைது செய்யப்பட்டான். மேலும் சஹாலம் லஸ்கர், அஹியா அகமது சௌத்ரி, பாபன் அகமது சௌத்ரி, ஐமாலுதீன் அகமது சௌத்ரி மற்றும் வான்பியாங் சுட்டிங் ஆகியோரை NIA கைது செய்தது.

அவர்களிடம் இருந்து பல டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் இவர்களின் நெட்வொர்க் பற்றிய தகவல்களை திரட்ட அதனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்புடைய மற்ற இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறையில் இருந்து தப்பிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறினர். அவர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்தியாவிலும் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். 2018ல் மத்திய அரசு அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 ரோஹிங்கியா முஸ்லிம்களை அவர்களின் சொந்த நாடான மியான்மருக்கு அனுப்பியது.

Leave a Reply

Your email address will not be published.