JeM பயங்கரவாத அமைப்பிற்கு வேலை பார்த்த முன்னாள் NIA அதிகாரியை கைது செய்த NIA…

NIA அமைப்பில் பணியாற்றிய IPS அதிகாரி திக்விஜய் நேகி, பயங்கரவாத அமைப்பிற்கு முக்கியமான ரகசியங்களை கசிய விட்டதாக கூறி என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு முக்கிய தகவல்களை கசிய விட்டதாக ஹிமாச்சல் பிரதேச ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முன்னாள் என்ஐஏ அதிகாரியுமான அரவிந்த் திக்விஜய் நேகியை NIA வெள்ளிக்கிழமை டெல்லியில் கைது செய்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸின் வீட்டில் NIA சோதனை நடத்தியது. அந்த NIA குழுவில் நேகியும் இருந்துள்ளார். பின்னர் குர்ரம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நேகி 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு NIA தொடங்கப்பட்டதில் இருந்து 11 ஆண்டுகளுக்கும் மேலாக NIAவில் பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்காக காவல்துறை பதக்கம் வழங்கப்பட்டது.

NIA உடனான பதவி காலத்தில் நேகி காஷ்மீரில் ஹூரியத் தலைவர்களுக்கு நிதியுதவி செய்த வழக்கு மற்றும் மனித உரிமை ஆர்வலர் வாஹித் பர்ரா கைது உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டார். 2020 ஆம் ஆண்டு குர்ரம் கைது செய்யப்பட்டதை அடுத்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேகி மீது NIA வழக்கு பதிவு செய்தது.

நேகி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஓவர் கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் அமைப்பினருக்கு தகவலை கசியவிட்டதாக NIA சந்தேகித்தது. அதாவது ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குர்ரம் பர்வேஸூக்கு நேகி முக்கியமான தகவலை கசிய விட்டதாக NIA சந்தேகம் தெரிவித்தது.

நேகியை கண்காணித்து வந்த NIA அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரில் நவம்பர் 22 ஆம் தேதி நேகிக்கு சொந்தமான இமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு, ஶ்ரீநகரின் சோனாவர் மற்றும் குர்ரம் பர்வேஸின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் NIA முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில நேற்று டெல்லியில் வைத்து NIAவால் நேகி கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை NIA கைது செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.