தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA.. பாய்ந்தது UAPA..

தேசிய புலனாய்வு நிறுவனமான NIA, ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மதுரையை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

சரவணகுமார் என்கிற அப்துல்லா மீது மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து NIA மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீவிரமாக அப்துல்லா கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

அப்துல்லா தனது பேஸ்புக் பக்கங்களில் ISIS தீவிரவாத அமைப்பை ஆதரித்து பதிவுகள் பதிந்துள்ளதாகவும், தமிழகத்தில் கிலாஃபாவை( Khilafah) நிறுவ முயன்றதாகவும் NIA தெரிவித்துள்ளது. கிலாஃபா என்பது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஒரு பிரதேசத்தை நிர்வகிக்கும் நிறுவனம் ஆகும்.

அப்துல்லா ஜிகாத் மூலம் தமிழகத்தில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு ஒரு ராணுவத்தை அமைக்க மற்ற இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. மேலும் அப்துல்லா தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தாஹிர் என்ற அமைப்பை சேர்ந்தவன் என NIA தெரிவித்துள்ளனர்.

அப்துல்லா ISIS அமைப்பின் சித்தாந்தத்தை தீவிரமாக ஆதரித்து வந்துள்ளான். ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பவருடன் இணைந்து ISIS இயக்கத்தை தமிழகத்தில் பரப்பி வந்துள்ளான்.

Also Read: விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் சென்னையில் கைது.. NIA அதிரடி..

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களில் இணைந்தது, இந்திய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டது, ISIS சித்தாந்தத்தை ஆதரிப்பது, பேஸ்புக்கில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பதிவிட்டதிற்காக NIA அப்துல்லாவை கைது செய்தனர்.

Also Read: அமெரிக்கா சீனா இடையே போர் வரலாம்: முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

சென்னை பூந்தமல்லியில் உள்ள NIA நீதிமன்றத்தில் அப்துல்லாவை ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அப்துல்லா மீது தேசதுரோகம், சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து NIA விசாரித்து வருகிறது.

Also Read: காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

Leave a Reply

Your email address will not be published.