பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை மயிலாடுதுறையில் கைது செய்தது NIA..

இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் மயிலாடுதுறையில் இன்று அதிகாலை முகமது ஆஷிக் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சில இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோயம்புத்தூரை சேர்ந்த 7 பேரை போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த 7 பேரில் ஒருவரான 20 வயதான முகமது ஆஷிக் என்பவன் மயிலாடுதுறையில் இருப்பதாக தேசிய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மயிலாடுதுறை போலிசார் உதவியுடன் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கோழி கடையில் வேலைபார்த்து வந்த முகமது ஆஷிக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். முகமது ஆஷிக் கடந்த ஆறு மாதமாக அந்த கோழிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் ரகசிய தகவலை அடுத்து மயிலாடுதுறையில் உள்ள நீடுரில் கோழிக்கடையில் வேலைபார்த்து வந்த முகமது ஆஷீக்கை இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பினர் பதிவு செய்த வழக்கில் முகமது ஆஷீக் முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர்கள் இந்து தலைவர்களை கொலை செய்து மத கலவரத்தை தூண்ட முயற்சித்ததும் தெரியவந்ததை அடுத்து நீதிமன்றம் அந்த ஏழு பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *