தைவான் உடனான நட்பை துண்டித்து மீண்டும் சீனாவை ஆதரித்த மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா..

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா தைவான் உடனான உறவை துண்டித்து மீண்டும் சீனாவுடன் நட்பை தொடர்ந்துள்ளது. இந்த நடவடிக்கையை சீனா வரவேற்றுள்ளது. சீனாவும் நிகரகுவாவும் வெள்ளிக்கிழமை இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்கின.

வியாழன் அன்று நிகரகுவா தைவானுடனான நீண்டகால உறவை முறித்து கொண்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே சீனா கொள்கைக்கு அங்கிகாரம் அளிக்கும் வகையில் வெள்ளி முதல் சீனாவுடன் மீண்டும் நட்பை தொடர்வதாக அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் தைவான் சீனாவின் ஒரு பகுதி எனவும் நிகரகுவா தெரிவித்துள்ளது.

தற்போது 14 நாடுகள் மட்டுமே தைவானுடன் உத்தியேகபூர்வ உறவுகளை கொண்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு எல் சால்வடார், டொமினிகன் குடியரசு மற்றும் காஸ்டாரிகா. 2019 ஆம் ஆண்டு சாலமன் தீவுகள் ஆகியவை தைவானின் நட்பை துண்டித்து சீனாவை ஆதரிக்க தொடங்கின. சீனாவின் விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர வளர்ச்சியால் தைவானை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நிகரகுவா தவிர்த்து மத்திய அமெரிக்காவில் பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் ஆகியவை மட்டுமே தைவானை ஆதரிக்கின்றன.

நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஒர்டேகா தைவான் மற்றும் நிகரகுவா இடையிலான நட்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். நிகரகுவாவின் இந்த முடிவுக்கு தைவான் வலியையையும் தனது வருத்தத்தையும் வெளிபடுத்தியுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் நிகரகுவாவின் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு இடையேனா சந்திப்பு சீனாவின் தியான்ஜினில் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னரே தைவான் உடனான உறவை கைவிடுவதாக நிகரகுவா அறிவித்தது.

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதை நிகரகுவா அரசாங்கம் அங்கீகரிப்பதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பிரதேசம் என அந்நாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. டிசம்பர் 10 அன்று இருநாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டன.

Also Read: குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு.. அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை..

ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் தூதர் ஜாங் ஜூன், நிகரகுவா நாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். அந்நாட்டின் முடிவை பாராட்டுவதாகவும், ஒரு சீன கொள்கை என்பது சர்வதேச சரூகத்தாஒ பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமித்த கருத்து எனவும் ஜாங் ஜூன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை நிகரகுவா அரசாங்ரத்தின் முடிவு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் அதன் அரசாங்கம் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூறியுள்ளது..

Also Read: சீனா மற்றும் லாவோஸ் இடையே ரயில் சேவை.. சீன கடன் பொறியில் சிக்கியதா லாவோஸ்?

தைவானில் உள்ள நிகரகுவா தூதரகம் தற்போது செயல்படவில்லை. அங்கு அந்நாட்டு தூதரும் இல்லை, அந்நாட்டு கொடியும் அகற்றப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ஒர்டேகா முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு தைவான் உடனான உறவை முறித்து சீனாவுடன் தொடந்தார். பின்னர் 1990 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வியாலேடா போரிஸ் டி சாமாரோவால் மீண்டும் தைவானுடன் இராஜதந்திர உறவு தொடரப்பட்டது.

Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..

தற்போது ஒர்டேகா மீண்டும் தைவான் உடனான நட்பை துண்டித்து சீனாவுடன் இணைந்துள்ளார். சமீபகாலமாக நிகரகுவா ஜனாதிபதி மற்றும் அமெரிக்கா இடையே உறவு மோசமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்கா நிகரகுவா தேசிய பாதுகாப்பு ஆலோசகரான நெஸ்டர் மொன்காடா லாவ் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் நிகரகுவா சீனா பக்கம் சாய்ந்திருக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.