பாஜகவில் இணைந்தார் மௌலானா ரசா கானின் மருமகள் நிதா கான்..
காங்கிரஸ் ஆதரவாளரும் இத்திஹாக்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌக்கீர் ரசா கானின் மருமகள் நிதா கான் ஞாயிற்றுக்கிழமை லனோவில் பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார்.
நிதா கான் உடன் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பாரதிய ஜனதாவில் இணைந்தணர். கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கான், முத்தலாக் தனது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்ததாக தெரிவித்தார்.
முத்தலாக்கை கொண்டு வந்ததன் மூலம் பாஜக சிறப்பான பணியை செய்தள்ளது. அதனால் தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். மற்ற கட்சிகள் பெண்களுக்கு சமஉரிமை, அதிகாரம் மற்றும் பாதுகாப்பில் வெற்று வாக்குறுதிகளையே கொடுக்கிறார்கள். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றி காட்டியுள்ளது என கூறியுள்ளார்.
நிதா கானும் முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர். அவரது மாமனாரான தாகீர் ரசா கானை விமர்சித்த கான், தனது சொந்த குடும்பத்திற்காக போராட முடியாதவர், இப்போது பெண்கள் உரிமைகள் குறித்து பேசுவதாக கான் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நிதா கான், முத்தலாக் விவகாரத்தில் நாங்கள் புகார் அளித்த பிறகு அவர் எங்களை ஆதரிக்கவில்லை.
எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் பெண்களுக்கு எதிராக ஃபத்வாக்களை வெளியிடுகிறார். அவர் தனது சொந்த குடும்பத்திற்காக எப்போதும் போராடியதில்லை என கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பட்லா ஹவுஸ் என்கவுன்டதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை மௌலானா தியாகிகள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முத்தலாக்கை தடை செய்ததற்காக மோடியை பாராட்டிய கான், உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.